பக்கம்:சோழ மன்னர்-முதற் பாகம்.djvu/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17

________________

17 பம் துய்த்த பிறகு இன்பம் அடைவராயிற் பெரிதும் மகிழ்ச்சி பெறுவரன்றோ ? அரசர் பிரானே, இனி நான் இதைப்பற்றி அதிகம் கூறுவதற்கில்லை. - அரசன் :- பெரியீர், நானும் என் இளையோனும் இருக்கும்போது எம் குலத்தோன்றலாகிய இச்சிறுவன் சிறையகப்படுவான் என்று நீவிர் கூறுவது எவ்வாறு பொருந்தும்? * நிமித்திகர்:- அரசர் பெருமானே, நீவிர் இருவீரும் இருக்கும்போது இளவரசன் சிறையகப்படுவான் என்று நான் கூறவில்லையே! இளம்பருவத்தே சிறை வாழ்வும் பிறகு சில நாளைக்கு மறை வாழ்வும் பெறுவான். என் றன்றே கூறினேன் ? இளவள ஞாயிறு தோன்றுங் காலத்தே திங்களும் உடுக்களும் மழுங்குவது காண்போ மன்றோ ? இரும்பிடர்த் தலையார்:- இறைவன் திருவருளால் எவ்வாழ்வு வரினும் அறிவுடையார் அதைப்பற்றி மனத் திலே ஒருவகை மாறுபாடும் கொள்ளாது அமைதியோடு அனுபவித்தல் வேண்டும். அரசரே, இளைய வேந்தரே, இனி நிமித்திகர்க்கு உரிய சிறப்புச் செய்வோம். அவர் சொல்ல உரியவற்றை யெல்லாம் சொல்லிவிட்டார். சொல்ல மனமின்றி மறைக்கும் செய்திகள் உளவாயின், அவற்றை நாம் கேட்டறிய முயலுதல் முறையாகாது. அரசன் :--அவ்வண்ணமே யாகுக. நிமித்திகப் பெரி யீர், இனி நீர் நும் இனத்தவரோடு நம் அமைச்சர் தரும் சிறப்புக்களைப் பெற்றுக்கொள்ள வேண்டுகிறேன். இந்த முத்து மாலையை நான் நுமக்குச் சிறப்பாகக் கொடுக்கின் றேன்; பெற்றுக்கொள்ள வேண்டுகின்றேன்.