பக்கம்:சோழ மன்னர்-முதற் பாகம்.djvu/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18

________________

18 இளையோன் :- நிமித்திகப் பெரியீர், இந்தப் பொற் பூமாலையையும் பெற்றுக்கொண்டு எம் குலத் தோன்றலை வாழ்த்த வேண்டுகின்றேன். நிமித்திகர்:- அரசர்காள், இறைவன் திருவருளால் இச்சோழர் குலத்தோன்றல் வாழ்வதற்குரிய பல்லாண்டு களும் நல் வாழ்வு பெற்று இன்பமும் அன்பின் செல்வ மும் படைத்து வாழ்க. பிடர்த்தலைப் பெரியீர், ஒளி நூலுண்மை நீவிர் அறியாததன்று. இனி வருவன வெல் லாம் நீரும் அறிவீர். எல்லாம் நலமாகுக. பின்னர் நிமித்திகர் விடை பெற்றுச் சென்றார். அதன் பிறகு பிடர்த்தலையாரும் அரசனும் சிறிது நேரம் பேசியிருந்தனர். இளைய வேந்தனும் தன் கருத்துக் களைத் தெரிவித்தான். பிடர்த்தலையார் நிமித்திகர் கூறிய வுண்மைகளை விளக்கிக் கூறினர். பின்னர் அரசன் சிறிது நேரம் எண்ணமிட்டனன். இளையோன் :- அரசரே, இனி என்றோ வரும் ஒரு தீமையைக் குறித்து இன்றே நாம் சிந்தித்து மனங் கலங் குவதேன்? நம் குலத் தோன்றல் மிகவும் இளம்பரு வத்தே நம் ஆதரவை இழப்பான் என்று நாம் அறிந் தோம். அரசராய்ப் பிறந்தோர் போர்க் களங்களிலே விழுப்புண் பட்டுமாயும் பேற்றைப் பெறு தில் பெருமையே யன்றோ ? அவனும் சிறுவனாயிருக்கையில் நாம் இரு வரும் இறைவன் அடிநிழல் அடைய நேரிடுமாயின், நாட் டின் நிலை என்னாகும் என்று நாம் ஏன் யோசிக்க வேண் டும்? எத்துணையோ ஆயிர வாண்டுகளாக இந்நாட்டி னையும் நம் மரபினையும் காத்து வந்து நமக்கு வேண்டும் நலங்களெல்லாம் உதவிய இறைவன், இன்று எங்கும்