பக்கம்:சோழ மன்னர்-முதற் பாகம்.djvu/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

19

________________

19 றான்? நம் நாட்டிற் போர்க் களத்திலே உயிர் துறத்தற் குப் பின்னிடைவார் இலர். நம் சிறுவனைப் பற்றிய பொறுப்பெல்லாம் நிமித்திகர் குறிப்பித்த வண்ணம் ஒரு நெருங்கிய உறவினர் கையில் அமைய வேண்டுவது முறை யேயாம். நான் அறிந்த மட்டில் இங்கு நம்முடனிருந்து இவ்வுண்மையை யெல்லாம் அறிந்திருக்கும் இப்புல வரைக்காட்டிலும் இவ்வரும்பணிக்குத் தகுதியுடை யார் வேறு எவரும் இல்லை. தீது வருக! நலம் வருக! யாவும் இறைவன் செயல்! அரசன்:-நாம் அறிய வேண்டா என்று நிமித்தி கர் மறைத்த செய்தியை அறிய விரும்பியதால், இத் துணை மனக் கவலையடைய நேரிட்டது. மக்கள் எதிர் கால விளைவை அறியவேண்டாவென மறைத்து வைத்த இறைவன் திருவுள்ளக்கருத்தை யாரே யறிவார்! பிடர்த் தலைப் பெரியீர், இனி நீர் நம் குடித் தோன்றலின் வாழ் விலும் உயர்ச்சியிலும் நாட்டமுடையீரா யிருந்து, இந் நாட்டுக்கு நம்மால் இயன்றது புரிவீராக. பிடர்த்தலையார்:- அரசரே, இளங்குமரன் ஒரு வன் தோன்றியிருக்கும் இந்நாளிலே நாடெங்கும் மகிழ்ச்சி பொங்க, அரசர் மனம் எதிர்கால வுண்மையை யெண்ணிக் கவல்வதேன்? இந்நாட்டின் நலங்கருதி எது செய்ய வுரியதாயினும், என்னால் இயன்றவரை செய்தற் குத் தடையுளதோ? என் தந்தையார் என்னை நும் அர சிற்குதவியாம் பணி பூணுமாறு அமைத்த நாள் முதல், எனக்கென வொன்றுமின்றி, எல்லாம் இந்நாட்டின் பொருட்டும் நும் மரபின் நலத்தின் பொருட்டுமேயென யான் கருதி வாழ்ந்து வருகின்றேன். என் கடமையை