பக்கம்:சோழ மன்னர்-முதற் பாகம்.djvu/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

21

________________

III சோழர் குடி விளக்கமாகப் பிறந்த இளவரசன் திருமா வளவன் என்ற பெயர் பூண்டு வளர் பிறை போல வளர்ந்து வந்தான் ; ஐந்தாம் பருவம் அடைந்தான் ; அறிவுடைப் பெரியார் பலர் முன்னிலையில் வித்தியாரம் பம் செய்விக்கப் பெற்றான். கல்விச் செல்வம் பொருட் செல்வத்தோடு பொருந்துவது பெருஞ்சிறப்பாமன்றோ? இளவரசன் கலை வளர்ச்சியை இரும்பிடர்த் தலையார் நன்கு கவனித்து வந்தார். நாடெங்கும் அமைதி குடி கொண்டிருந்தது. சேட்சென்னிக்குப் பிறகு அரசுரிமையை நாடுவோம் என்று எண்ணி மறைவில் முயன்ற பலரும் ஒன்று சேர்ந் தனர். அவருள் மிக்க வுரிமை தனக்கிருப்பதாய்க் கரு திய வொருவன் தலைமை பூண்டான். அவன் மற்றெல் லோர்க்கும் தான் அரசுரிமை பெறும்போது தக்க பதவி கள் அளிப்பதாகக் கூறி அவர்களை வசப்படுத்திக்கொண் டான்; சோழ நாட்டுக்கு அருகிலுள்ள காடுகளிலே தன் முயற்சிகளைச் செய்து பெரும்படையைத் திரட்டிப் போர் தொடங்கி வந்தான். • இச்செய்தியை ஒற்றராலும் பிற வாயில்களாலும் அறிந்த சேட்சென்னியும் இளஞ்சேட் சென்னியும் தம் படையைத் திரட்டி, உறையூர்க்குப் புறத்தேயுள்ள