பக்கம்:சோழ மன்னர்-முதற் பாகம்.djvu/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22

________________

22 பறந்தலை யடைந்தனர். சோழர் குடி விளக்கமாகிய திரு மாவளவன், ஏழாண்டு நிரம்பப் பெறாதவனாயிருந்தானா கையால், அரண்மனை யகத்திருந்தான். அரசர் இரு வரும் போர்க்களம் செல்ல நேரிட்டதால், இளவரசன் அதிக ஆடம்பரமின்றி முடி சூட்டப் பெற்றான். இரும் பிடர்த்தலையாரும் காவற் படைஞரும் அவனுக்குதவி யாக நகரகத்தே யிருந்தனர். போர்க்களத்தே பகைப் படையும் நாட்டுப் படை யும் எதிர்த்து நின்று போர் தொடங்கின. பகைவன், " இளஞ்சிறான் ஒருவன் கையில் இச்சோழர் குடிக்குரிய அரசுரிமை இருக்க விடேன்," என்ற உறுதி கொண்டு போர் புரிந்தான். அவனுக்குதவியாய் வந்தோர் பலர் இருந்தாராதலால், சோழர் இருவரும் மிக்க கடும்போர் செய்ய நேரிட்டது. சேட்சென்னி நின்ற பகுதியிலே பகைவரில் எண்ணிறந்தார் மடிந்தனர். மாலைக் காலம் குறுகியது. அவ்வமயத்திலே அற நெறிக்கு மாறாகப் பகைப்படையிலிருந்து வந்த நஞ்சூட்டிய அம்பொன்று அவன் மார்பிற் பாய்ந்தது. உடனே அவன் இறைவன் திருவருளை யெண்ணி நிலத்தே சாய்ந்தான். அருகிலிருந் தார் அவனைப் பாசறைக்கிட்டுச் செல்ல முயன்றனர். அவன் இடை வழியிலேயே விண்ணகம் புகுந்தனன். படைஞர் அவன் உடலைச் சுமந்து சென்றனர். இச் செய்தி யறியாமல், மற்றொரு புறத்தே போர் புரிந்து வெற்றி பெற்றுப் பாசறைக்குத் திரும்பிய இளஞ்சேட் சென்னி, அங்கு வந்ததும் இறைவன் அருட் செயல் இருந்தவாற்றை யறிந்து, மூத்தோனுக்கு அந்நிலையிற் செய்தற்குரிய கடனெல்லாம் செய்து முடித்தான்.