பக்கம்:சோழ மன்னர்-முதற் பாகம்.djvu/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

23

________________

23 மறு நாளும் போர் நிகழ்ந்தது. இளஞ்சேட்சென் னியின் போர்த் திறத்தாற் பகைவரிற் பெரும்பாலோர் விண் புகுந்தனர். எஞ்சி நின்றோர் காட்டகத்தே புகுந்து மறைந்தனர். பெரும்படையோடு இளையோன் அவரைத் தொடர்ந்து சென்றான். காட்டகத்தே பலர் பல விடங்களிலும் மறைந்து நின்று போர் புரிந்தனர். அநேகர் அழிந்தனர். சிலர் பணிந்தனர். பகைவருட் டலைமை பூண்டோர் எவரும் வெளி வராது காட்டுள் மறைந்தனர். இத்துணை நாள் போர்க்களத்தே யிருந்தது போதும் என்று எண்ணிய இளையோன் நாடு நோக்கித் திரும்பினன். உடம்பெல்லாம் அம்பு பாய்ந்து புண் பட்டு வீரச் சிறப்போடு வெற்றித் திருவைப் பெற்ற இளஞ்சேட் சென்னி நாட்டகம் புகாமுன்னரே, விண்ணவர் அவனை எதிர்கொண்டழைக்கலாயினர். அதனால், மிகவும் இளம் பருவத்தே திருமாவளவன் அரசப் பொறையைத் தானே வகிக்க நேரிட்டது. தாயார் அனைவரும் தம் கணவன்மார் சென்றவழிச் செல்லக் கருதி உயிர் துறந்த துயரக் காட்சியையுங் கண்டான். அவன் உள்ளத்திலே எழுந்த உணர்ச்சி இன்னதென்று கூறக் கூடாத நிலை மையன் ஆயின்ன். இரும்பிடர்த் தலையார், முன்னே நிமித்திகரால் அறிந்த செய்திகள் உண்மையில் விளைந்தது கண்டு உள்ள முருகி, நாட்டுக்குக் கேடுண்டாகா வண்ணம் காவுல் புரியத் தக்க படைஞரை யமைத்தனர். ஆயினும், காட்டுள் மறைந்த பகைவர்கள், அரசர் இருவரும் இறந்த செய்தி யறிந்து, பின்னும் பல உதவிப் படைக