பக்கம்:சோழ மன்னர்-முதற் பாகம்.djvu/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24

________________

24 ளைத் திரட்டிக்கொண்டு நாட்டினகத்தே வந்து, உறை யூர் அரணை முற்றுகையிட்டனர். இரும்பிடர்த் தலை யார் இளங்குமரனாகிய அரசனை முன்னிறுத்திப் படை ஞரை யெல்லாம். அற நெறி பிழையாது போர் புரியத் தூண்டினர். படைஞர் தம்மால் இயன்றவளவு போர் புரிந்தனர். தக்க தலைவர் இல்லாமையால், அவர்தம் முயற்சியெல் லாம் வீணாயிற்று. ஐந்து நாட்கள் வரையிற் பெரும் போர் நிகழ்ந்தது. இறுதியிற் பகைஞர் வென்றனர். அரசுரிமையை நாடிய கொடியோன் விரைவிலே அர ணுக்குட் புகுந்து அரண்மனை யடைந்து, பிடர்த்தலைப் பெரியாரையும் திருமாவளவனையும் சிறை செய்தான். நல்லோ ரெல்லாம் நாடு என்னாகுமோ என அஞ்சினர். எவரும் தராமலே, யாதோர் உரிமையும் இல்லாமலே பெற்ற அரசுரிமையை அக்கொடியோன் ஏற்றுக்கொண் டான்; பிடர்த்தலையாரை அரசாங்கத்துப் பெருஞ்சிறைக் களத்தே அடைத்து வைத்தான்; இளவரசனை அரண் மனை யகத்தே ஒரு தனியிடத்தே தக்க காவலோடு வைத் திருந்தான். நாடெங்கும் அரசு நிலை மாறிய செய்தி பரவத் தொடங்கியது. நல்லோர் மனம் புழுங்கினர்; தம்மனத்தி லெழுந்த கருத்துக்களை அடக்கலாற்றாது சொல்லத் தொடங்கினர். தன்னரசின் நிலைமையைப்பற்றி மக்கள் பேசுவதை யறியப் புதிய மன்னன் பல ஒற்றரையமர்த்தி யிருந்தான் ; அவர் தினந்தோறும் கொணரும் செய்தி களை யறிந்து மனம் புண்ணானான். போரின் பொருட்டு நேரிட்ட செலவை யெல்லாம் நாட்டு மக்களிடம் கடுந்