இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
________________
உரிமையுரை வளமிகுபைந் தமிழ்மொழியை யடியேற்கு வழங்கியருள் வண்மைச் செல்வர் இளமைமுத லெனையுணர்ந்து மேன்மேலும் எழுநெறியை இனிது காட்டி உளநெகிழ்வா லரியபொருள் பலவெளிதி னுண ரவிரித் துரைத்த வள்ளல் தெளிஞர்களி லுயர்ந்ததிரு நாரணவா ரியர்பதங்கள் சிந்தை செய்தே மனமொழிமெய் யுறவணங்கிப் பழந்தமிழின் பனுவல்களின் வழியிற் சென்று தினமுயன்று பெறுபொருளிற் சிறிதுசிறார் பொருட்டு தவிச் சிறப்பா வெண்ணிக் கனக மழை பொழிவளவன் கரிகாலன் வரலாற்றைக் காட்டு மிந்நூல் என துசிறு பணியெனவே யேற்கவெனத் தொழுதுரிமை யிசைத்தேன் மன்னோ. நா. கனகராஜன்