பக்கம்:சோழ மன்னர்-முதற் பாகம்.djvu/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26

________________

26 நாட்டிலே சிறிது பரிசு பெற்றுச் சேர நாட்டிலே சென்று, கருரிவூலே தங்கியிருந்தார்; கருவூரிலே ஏழைக் குடிகள் வாழும் ஒரு சிறிய தெருவிலே பிறர் அறியா வண்ணம் மறைவாக வாழ்ந்து தம் எண்ணம் நிறைவேற வேண்டிய முயற்சிகளைச் செய்து வந்தார். அவர் அங்கு இவ்வாறிருக்கையில், திருமாவள வன் சிறைக்களத்தே படங்கியிருந்தான்; பெற்றோரை யிழந்து, அரசுரிமையை யிழந்து, பெற்றோரினும் உற்றோ ராயிருந்த பிடர்த்தலைப் பெரியாரைப் பிரிந்து, இன்னது செய்வது என்று அறியாது மயங்கினான்; சிறைக்களத்தே சில நல்லோர் அடைபட்டிருப்பதையும் அறிந்தான். இரண்டு மூன்றாண்டுகள் சென்றன. அரசுரிமையை மறப் போரால் தன் கைக்கொண்ட கொடுங்கோலன், நல்லோர் பலரைச் சிறைக் களத்திட்டும், சிலரை நாட்டினின்று அகலச் செய்தும், அரசிளஞ் சிங்கத்தைச் சிறை செய்தும் திருப்தி யடையாது, தன் தலைமை நிலை பெறுதற்காக ஒரு சூழ்ச்சி செய்தான்: தான் செய்திருக்கும் அதிக்கிரமச் செயல்களைக் கண்டு குடி மக்கள் எதிர்த்து நில்லாமையால், மேலும் மேலும் தான் எண்ணிய வண்ணமெல்லாம் நிறைவேற்றலாம் என்ற உறுதி கொண்டான். குடி மக்களுள் நல்லோர் பலர் சிறைக் களத்தே அடங்கியிருப்பினும், சிறைப் புறத்தே யிருந்தாருட் பல ரும், " எப்பொழுது தகுதியான காலம் வரும்?.இந்தக் கொடியோனை எப்பொழுது எதிர்க்கலாம்?" என்றே எண்ணமிட்டிருந்தனர். இரு திறத்தாரும் ஒருவர்க்