பக்கம்:சோழ மன்னர்-முதற் பாகம்.djvu/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

27

________________

-27 கொருவர் மாறுபாடாகச் செய்து வரும் சூழ்ச்சிகள் மறைவிலே எவரும் அறியா வண்ணம் நடந்தன. இளவரசன் ஒருவன் உயிரோடு இருப்பது. தன் அரசாட்சிக்குப் பெருத்த இடையூறாகும் என்று அக் கொடியோன் எண்ணினான். ' இளவரசன் ஒருவன் இருந்தாலன்றே அரசுரிமையை அவனுக்குத் தரவேண்டி நன்மக்கள் என்னை எதிர்ப்பர்?' என்று தீர்மானம் செய் தான். "குடி மக்கள், தமது அன்புக்கு இடமாகிய இள வரசன் ஒருவன் இல்லாது போவானாயின், நாட்டின் அமைதியைக் குலைத்து வீணே நாட்டினை அரசின்றி யழியச் செய்யார், என்று அவன் மனப்பால் குடித் தான்; அறத்திற்கும் உண்மைக்கும் நன்மைக்கும் மாறாகிய இத்தன்மையான பல வகை யெண்ணங்களையும் எண்ணி ஒரு முடிவு செய்தான். அவனை யெதிர்த்துத் தாக்கக் கருதிய குடி மக்கள் செய்த சூழ்ச்சிகளும் ஒரு முடிவுக்கு வந்தன. இவன் கொடியோனாயினும், நம் இளவரசைச் சிறையகப்படுத்தி யுளனாயினும், நமக்கு இப்பொழுது படைஞர் உதவி யின்மையால், நாம் என்ன செய்ய இயலும்? என்றார் ஒரு சிலர். நல்லோர் பலரைச் சிறையிட்டானாயினும், சிலர்க்குக் கடுந்தண்டம் விதித்தானாயினும், நம்மை முன் னின்று நடத்த வுரியார் ஒருவரும் இல்லாத இந்நிலை யில் நாம் என் செய்வோம்? என்றார் வேறு சிலர். "சிறையகத்தே புகுந்தார் எவர்க்கும் இவன் பெருந்துன் பம் விளைத்திருப்பதாக இதுவரை மறைச் செய்தி ஒன்றும் வெளி வராமையாலும், நம் அரசரை இவன் மரியாதையாக நடத்துவதாகவே நாம் அறிந்த சிலர்