உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சோழ மன்னர்-முதற் பாகம்.djvu/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28

________________

28 உண்மையை யுணர்ந்து கூறுகின்றமையாலும், நாம் இப் பொழுது இவனை யெதிர்க்கத் துணிவது குற்றமே. நம் முயற்சியின் பயன் தீங்காய் முடியினும் முடியலாம்,' என்றார் மற்றும் சிலர். 'சிறையகத்தே யிருக்கும் அர சர்க்கும் சான்றோர்க்கும் இவன் எத்தகைய வாழ்வு கொடுத்துள்ளான் என்பதை நாம் அறியோம். என்றே னும் பெருந்தீங்கு இயற்ற இவன் எண்ணி முயல்வதாக அறிவோமாயின், அன்று நாம் அனைவரும் ஒருங்கு சேர்ந்து இவனை எதிர்ப்போம், என்று கூறினர் பின் னும் சிலர். இவ்வாறு குடி மக்களுட் பலர் தன் அரசாட்சியில் வெறுப்புக்கொண்டிருப்பதை அறிந்தும், அக்கொடுங் கோலன் அதனைப் பொருட்படுத்தாது, தன் சூழ்ச்சிகளை நடத்தி வந்தான். அரசிளஞ் சிங்கமான திருமாவளவன் அடைபட்ட சிறைக்களம், பொது மக்கள் அறியா வண் ணம் மறைவாயிருந்தது. சிறை புகுந்த நல்லோர் பலர் உரிமைகளும் உடைமைகளும் அரசினருடையவாயின. புதுமை புதுமையாகப் பல வகையான அரசிறைகள் ஏற்பட்டன. கொடுக்க வியலாதவர் எல்லாம் கடுந்தண் டம் விதிக்கப்பட்டனர். அவன் ஒரு நாள் தன் அரண்மனையின் தனி யறையில் அமர்ந்து, "திருமாவளவன் சிறியோன்! இச் சிறிய விடலையோ என் உரிமைகளுக்கு எதிராக நிற்ப வன்! இவன் வலிமை யென்னே! இவனைச் சார்ந்து நிற் கும் வீரர் வலிமை யென்னே ! இவன் தந்தையும். அரச ரும் என்னை யெதிர்த்து என்னாயினர்? இவன் சிறைக் களத்தே யடங்கியிருப்பினும், என் மனம் அமைதி