பக்கம்:சோழ மன்னர்-முதற் பாகம்.djvu/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30

________________

IV பெருங்காற்று வீசியது. அருகில் நிற்பாரை அறியலாகா விருள் சூழ்ந்தது. மக்களும் மாக்களும் அஞ்சி அகத்தே யடங்கும் நள்ளிரவு வந்தது. காவலரும் கள் வரு மன்றிப் பிறர் எவரும் நடமாட அஞ்சுகின்ற நடு நிசிப் பொழுதிற் காற்றின் வேகம் அளவிடற்கரிதாயிருந் தது. எவரும் எதிர் பாராத வண்ணம் அவ்வமயத் திலே அரசாங்கத்துப் பெருஞ்சிறைக்களம் தீப்பற்றி யது. அகத்தும் புறத்தும் இருந்த மரங்களெல்லாம் பற்றி யெரிந்தன. கதவுகள் தூணங்கள் உத்திரங்கள் போதிகைகள் எல்லாம் தீப்பற்றிக்கொண்டன. பெருஞ் சிறைக்களம் ஒரே தீப்பிழம்பாக ஒரு காத தூரத்துக்கு விளக்கமாகத் தெரிந்தது. அந்நெருப்பின் வேகத்தால் உண்டான தாபம் எங்கும் பரவியது. உறக்க மயக்கத்தில் ஆழ்ந்து கிடந்த பலரும் பதற் றத்தோ டெழுந்தனர். செய்வதறியாது மருண்டனர் சிலர். ஒருவர்மே லொருவர் மோதி, விழித்ததும் விழி யாததுமாக விழுந்தோடினார் சிலர். கச்சங்களை வரிந்து கட்டிக் குடங்களைத் தூக்கிக்கொண்டு தண்ணீர் இருக்கு மிடங்களுக்கு ஓடித் தங்கள் தங்கள் வீட்டுக் கூரைகளில் நீர் இறைத்தனர் பலர். வெகு பரபரப்பாக அயல் வீட் டுக் கூரைகளைப் பிரித்தெறிந்தார் சிலர். வேறொன்றும் செய்ய வியலாமையால், பெருங்குரலாற் பிறரை யேவிக்