பக்கம்:சோழ மன்னர்-முதற் பாகம்.djvu/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

31

________________

கொண்டிருந்தார் சிலர். இவ்வாறு மக்கள் மயங்கும் அமயத்தே சிறைக் களத்தகத்தே பல நூற்றுக் கணக் கான நல்லோர் அடங்கி யிருந்ததைச் சிலர் அறிந்தனர். அவர் தம் மயக்கத்தை யொழித்து விரைவிலே சமயோ சிதமான முயற்சி செய்யத் தொடங்கினர். நெருப்பினுக் கஞ்சாத நெஞ்சுடையோர் சலா புறப் பட்டனர்; சிறைக் களத்தைக் குறுகினர். எங்கு நோக்கி னும் நெருப்பும் நெருங்க வியலாத புகையும் நிரம்பின. இக்காட்சியைக் கண்டும் அச்சங் கொள்ளாது சிறை யகத்தே புகுந்தனர்; விரைவிலே பலரை விடுவித்தனர்; மறைவாக அமைந்த கிடங்குகளை அறியாமல் தேடிக் கொண்டிருந்தனர். இவர் உதவியின்றித் தாமாகவே பலர் வெளி வந்தனர். சுவர்களின் மேற் பாய்ந்தும், தீயிடை வீழ்ந்தும், இடிந்த கட்டடங்களில் இடறி மறிந்தும், கால்கள் ஒடிந்தும், உடம்பு எங்கும் புண் பட்டு ஓடி வந்தனர் சிலர். சிறையிருப்பாரை விடுவிக்கச் சென்ற பலரும் நெருப்பின் கொடுமையைக் கண்டு விரைவிலே எங்கெங்கும் தேடித் தாம் எதிர் பார்த்த பொருளைக் காணாது ஏமாறியவர் போல வெளியேறினர். இதற்குள் சிறைக்கள வாயிலிலே எண்ணிறந்தார் கூடினர். சிறையிருந்து வருவாரும் விடுவிப்பாரும் இன் னார் இன்னார் என்று அறியக் கூடாதவாறு எல்லாரும் நெருப்புப் பற்றிய ஆடைகளோடு வெளிவந்தனர். உடம் பெல்லாம் தீப்பட்டு வெளி வாயில் வரை ஓடி வந்து விழுந்து இறந்தார் பலர். இக்காட்சியைக் கண்டு பொறாத நல்லோர் பலரும், “இத்தீயெழுந்த காரணம் என்னவா யிருக்கும்? என்று யோசிக்கலாயினர். அரசு பூண்டு