பக்கம்:சோழ மன்னர்-முதற் பாகம்.djvu/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32

________________

32 - இருக்குங் கொடியோன், நல்லோர் பலரையும் சிறை செய்ததனோ டமையாது, அவர்களை நெருப்பினால் அழிக்கவும் துணிந்தான் போலும்!" என்று கரு தினர்; "அவ்வாறு அவன் கருதியிருப்பின், அவ னுக்கு நேர் பகையாய் இருப்போர் நம் இளவரசரல் லரோ? அவர் இப்பொழுது என்னவாயினரோ! அறி யோம்!" என்று எண்ணமிட்டனர். நம் இளவரசரும் இச்சிறைக்களத்திலேயே எங்கேனும் மறைவாக அடைக் கப்பட்டிருப்பார், என்று சிலர் கூறினர். இச்சொல் செவிப்படு முன்பே, அங்கிருந்த சிலர், நெருங்கி வரும் நெருப்பை யஞ்சாது, மறு முறையும் சிறைக்களம் புகுந் தனர்; தம் உயிர் போவதாயிருக்கினும், தம் இளவர சைத் தேடிப் பெறவேண்டும் என்று முயல்வாராயினர். அவருட் பலர், திரும்ப வெளியேறவழியறியாது, இருந்த விடங்களிலே புகை சூழ்ந்துகொண்டதால், இளவரசர் பொருட்டுத் தம்முயிரைக் கொடுத்தனர். உட்புகுந்தாரில் மிகச் சிலரே வெளி வந்தனர். இத்துணைப் பெருங்கலக்கத்தினிடையில் திருமா வளவன் எங்கிருந்தனன்? என்னாயினன்? சிறைக்களத்தே பகைவர்களை யடைக்கப்படும் ஒரு பாதாளக் கிடங்கில் இருந்தான்; எங்கும் இருளே சூழ்ந்து கிடந்த இடத் தில் திடீரென்று வெப்பமும் வெளிச்சமும் தோன்றக் கண்டான்; காரணம் அறிய வழி தேடி மேலும் கீழும் பார்த்தான்; தீப்பற்றி யெரியங் காட்சியைக் கண்டான்; தலைக்கு மேலே பெருங்கூக்குரல் உண்டாயதைக் கேட் டான்; கட்டடங்கள் இடிந்து விழும் சத்தமும், திடுதிடு என்று பலர் ஒடும் சத்தமும் கேட்டான்; கையில்