பக்கம்:சோழ மன்னர்-முதற் பாகம்.djvu/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

33

________________

33 இருந்த விலங்குகளைக் கல்லிலறைந்து தகர்த்தான். "எது வரினும் வருக, என்று மேல் நோக்கிச் சிங்கக் குருளை போல நின்றான் ; தலைமேலிருந்த கட்டடம் இடிந்து விழக் கண்டான்; ஒரு புறமாக ஒதுங்கினான்; கல்லும் மண்ணும் மரங்களும் அவன் ஏறி மேற்செல்லத் தக்க படிபோல அமைந்தது உணர்ந்தான்; முன்னே என்ன இருக்கும் என்று அறியாமல் விரைந்து பாய்ந்தான்; ஓர் அடுக்கு மேலே சென்றான்; எங்கும் புகையும் நெருப் பும் சூழ்ந்து, இடை முற்றம் பாழாய்க் கிடக்கக் கண் டான். எவ்வாற்றாலேனும் வெளியேற வேண்டும் என்ற எண்ணமே முன்னின்றதால், நெருப்பையும் புகையை யும் பொருட்படுத்தாது, வாயிலிருந்த திசையை நோக் கினன்; வழியோ, தடைபட்டு நெருப்பு மயமாகக் கிடக் கக் கண்டான்; முற்றத்திலே பாதி யெறிந்து கிடந்த பெருங்கட்டை யொன்றை மேன்மாடத்தை நோக்கி நிறுத்தினான்; அதன் உதவியால் மேலே ஏறினான். அவன் கால் வைத்த இடம் மேற் சென்றதும் கீழே சரிந்து விழுந்தது. மாடத்தின்மேல் எங்கும் நெருப் புக் கண்டான்; தாவித் தாவி இடை வெளிகளிற் கால் வைத்துக்கொண்டே வந்தான்; சுவரோரம் அடைந் தான். ஒரு பலகணி பற்றியெரிந்து கீழே விழும் நிலை யில் இருப்பது கண்டான். அதைத் தள்ளிவிட வேண்டுமென்றால், நெருங்கிச் செல்ல வேண்டும். நெருங் கிச் செல்வதாயின், நெருப்பை மிதித்தல்வேண்டும். தள் ளினால், கீழே நிற்பார்க்குத் தீங்கு நேரினும் நேரிடலாம். ஒரு கணப் பொழுது யோசித்தான் ; பிறகு சிறிது பின் வாங்கி, எரிந்துகொண்டிருந்த அப்பலகணியினூடே