பக்கம்:சோழ மன்னர்-முதற் பாகம்.djvu/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

35

________________

பலரும் அங்கு வந்து கூடினர். அரச குமாரன் சிறைக் களத்தினுள் அகப்பட்டிருப்பான் என்ற உறுதியோடு தேடச் சென்றார் பலர் அடைந்த அல்லலை யறிந்தனர்; மிகவும் மனங் கவன்றனர். சூரியனும் உதித்தான். பல பக்கங்களிலும் தேடுமாறு ஆட்கள் போயினர். கால்கள் கரிந்த ஒரு சிறுவனை மருத்துவர் வீட்டில் விட்டோம்,' என்று சிலர் கூறினர். அது கேட்டு, அங்கு ஓடிச் சிலர் தேடினர். அங்கிருந்து அவன் இரவிலேயே வெளியேறிப் போய்விட்டான் என்ற செய்தி வெளியாயது. ' இளவரசனாகிய திருமாவளவன் அவன்றானோ, வேறு யாரோ!' என்ற ஐயம் எழுந்தது. ஒவ்வொருவ ரும் தத்தம் மனத்தில் எழுந்த எண்ணங்களைக் கூறலா யினர். சிலர் கொடுங்கோலன் செய்த கொடுமைகளைக் கூறத் தொடங்கினர். சிறைக் காவலரும் பிற அரசாங்க ஏவலரும் இருந்த விடம் தெரியாமல் மறைந்தனர். சிறைக்களத்துக்கு முன்னே எண்ணிறந்த ஆடவர் கூடி னர். அவரனைவரும், " இவ்வாறு நாட்டில் வாழ்ந்த நல்லோர் பலரைச் சிறைசெய்து அரசிளங் கொழுந்தைத் தீக்கிரையாக்கிய இக்கொடியோனை இன்றே, இப்பொ ழுதே, சென்று எதிர்த்து அழிப்போம்! என்று பேசித் தீர்மானித்தனர். . உடனே, எவரும் எதிர் பாரா வண்ணமாக அரண் மனையை நோக்கிப் பல்லாயிர ஆண் மக்கள் நிரம்பிய பெருங்கூட்டம் ஒன்று புறப்பட்டது. அவருள் வாய் வன்மைபடைத்தோரெல்லாம்,"எங்கே அக்கொடியோன்? எம் அரசைக் கைக்கொண்டு நல்லோரையெல்லாம் சிறை செய்த அந்நரகன் எங்கு ஒளித்தான்? இளவரசைச்