பக்கம்:சோழ மன்னர்-முதற் பாகம்.djvu/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36

________________

36 சிறையிட்ட திருவிலி எங்குற்றான்? திருமாவளவனை எரி வாய் மடுப்பித்த தீயோன் எங்குளன்? என்று கூக்குர லிட்டுக்கொண்டு சென்றனர். அரண்மனைக் காவலர் எல்லாம், இக்கூட்டத்தின் வருகையைக் கண்டு, இருந்தவிடம் தெரியாமல் ஒளித் தனர். படைஞரை முறையே நிறுத்தி எதிர்த்து வரத் தக்க ஆண்மை படைத்தார் எவரும் முன் வந்திலர். அரண்மனையகத்தும் புறத்தும் ஆத்திரம் மிக்க ஆடவர் சூழ்ந்த னர். சீறினர் சிலர்; பாய்ந்த னர் சிலர்; அரசிளஞ் சிங்கத்தின் கதியை நினைந்து கலங்கிக் கண்ணீர் வெள் ளம் பெருக்கினர் சிலர். "எம் நாட்டின் அரசினையழித்த இப்புல்லியோனை இன்று விண்ணுலகேற்றாது மீளோம்! என்று வஞ்சினங் கூறினர் சிலர். இக்காட்சியைக் கண்டு உள்ளிருந்த கொடுங் கோலன், சேவகன் போல மாறு வேடம் பூண்டு, வெளி யேறிப் பின் புற மதில்மேற் பாய்ந்து, காட்டக மடைந் தனன். அரண்மனை யெங்கும் தேடிப் பார்த்தும் அக் கொடியோனைக் காணாத நாட்டு மாந்தர், மிகவும் மனம் புண் பட்டு, "இனி என் செய்வது! என்று யோசிக்கத் தொடங்கினர். அறிவிலும் ஆண்டிலும் முதியோர் ஒருவர், அவர் களை யெல்லாம் ஒருவாறமைதி பெறச் செய்து, "அன் புடைய நன் மக்களே, இந்நாள் வரையில் நம் நாட்டுச் சரித்திரத்திலே கேளாத செய்தி இன்று இங்கே நடந் திருக்கிறது. நாம் இதைச் சிறிது பொறுமையோடு கவ னிக்க வேண்டும். இதுவரையில் நம் மனத்தில் எழுந்த ஆத்திரத்தால் நாம் செய்த காரியங்களின் குண குற்றங்