பக்கம்:சோழ மன்னர்-முதற் பாகம்.djvu/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50

________________

50 காண எண்ணி அங்கடைந்தனர். அரசாட்சியிற் சமீப காலத்தில் ஏற்பட்ட மாறுபாடுகளை அவர்கள் அறிந்திலா மையால், பண்டு ஒரு கால் தாம் கண்டிருந்த அரசனே அன்றும் இருப்பன் என எண்ணியிருந்தனர். அவ் விருவரும் வாயில் காவலரால் அரசனருகில் அழைத் துச் செல்லப்பட்டனர். காவலர் வெளி வந்தனர். முதி யவர் இருவரும் ஏடுகளைப் புரட்டிப் பார்த்துக்கொண் டிருந்த இளைஞனாகிய அரசனைக் கண்டனர். கண்டதும் அவனை நெருங்கி ஒன்றும் கூறாது திரும்பப் புறப்பட் டனர். கரிகாலன் அவர்களை நோக்கிச் சட்டென்று திரும் பிக் கையமைத்து, "ஐயன்மீர், நீவிர் இங்குவரக் காரணம் என்ன? வந்து ஒன்றும் கூறாது திரும்பத் துணிந்த தேன்? எனக்கு ஒன்றும் விளங்கவில்லையே! உங்கள் உள்ளத்தில் உள்ள உண்மையை ஒளியாது கூற வேண்டு கிறேன், என்று இன் முகத்தோடு கூறினன். முதன் முதியவர்:- ஐயா, யாம் ஒரு பெரிய வழக் கின்பொருட்டு அரசரைக் காண வந்தோம். அவ்வழக் கின் நுட்பங்களை நன்கு ஆராய்ந்து முடிவு கூறுதல் அற நூல்களைத் தீரத் தெளிந்த சான்றோர்க்கே இயல்வதாம். இளைஞர் அதன் உண்மையை அறிந்துகொள்ளுதல் எளிதன்று. நம் நாட்டகத்தில் அற நிலைக் களத்தார் ஆங்காங்கு நன்கு ஆராய்ந்து வழக்குத் தீர்ப்பாராயினும் அரிய நுட்பமான வழக்குகளின் பொருட்டு அரசரிடம் வருவது எமது வழக்கமாம். இன்று யாம் அரசரைக் காணவேண்டும் என்ற போது, வாயில் காவலர் எம்மை இங்கு நும்மிடம் அழைத்து வந்தனர். இந்நாட்டை