பக்கம்:சோழ மன்னர்-முதற் பாகம்.djvu/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

49

________________

உரைமுடிவு காணான் இளமையோன் என்ற நரைமுது மக்கள் உவப்ப-நரைமுடித்துச் சொல்லால் முறைசெய்தான் சோழன் : குலவிச்சை கல்லாமற் பாகம் படும். - பழமொழி இவ்வாறு கரிகாலன் இரண்டாம் முறையாக அரசு தாங்கி ஆட்சி புரிந்து வருகையில், ஒரு நாள் அரண் மனையிலே தனியறையொன்றிலே அறநூல்களை ஆராய்ந்து கொண்டிருந்தான். இரும்பிடர்த் தலையாரை அமைச்ச ராகவும் ஆசிரியராகவும் அம்மானாராகவும் பெற்ற வளவர் குலத் தோன்றல், நூலாராய்ச்சியின்றி கணப் பொழுதே னும் வறிது போக்குவனோ? இன்னும் அரசப் பொறை தாங்கத்தக்க வயதேனும் உலக அனுபவமேனும் பெறாத வனா யிருப்பினும், ' மகனறிவு தந்தை யறிவு ' என்ற முதுமொழி பொய்படா வண்ணம், நல்லோர் பலர் சேர்க் கையும் அமைச்சர் ஆலோசனைப் பயனும் சூழ்ச்சித் திற னும் உதவியாகப் பெற்று, நாட்டிற்கு நலம் புரியும் முயற் சியில் முன்னின்றான். புத்தக சாலையை யடுத்ததோர் அறையில் அவன் அமர்ந்திருந்து, அறிஞர் உதவி கொண்டு அறிந்த பொருள் களை ஆராய்ந்து தெளிய முயன்றான். அவ்வமயத்தில் முதியவர் இருவர் ஒரு வழக்கின் பொருட்டு அரசனைக்