பக்கம்:சோழ மன்னர்-முதற் பாகம்.djvu/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48

________________

48 இவ்வளவு கொடுமைக்கும் காரணனாயிருந்த சோழர்குலப் பகைஞன், மண் வாழ்வு இழந்து விண் வாழ்வுபெற்றான். அவனுக்கு உதவியாய் நின்றோரிற் பலர் மடிந்தனர். எஞ்சி நின்ற சிலர் சிறைப்பட்டனர். போர்நிறைவேறியது. நாட்டு மாந்தர், மகிழ்ச்சி மீதூரப் பெற்று, மனமார வாழ்த்தித் தம் அரசர் பிரானை வரவேற்று, அரண் மனைக்கு அழைத்துச் சென்றனர். பாணர் கூத்தர் விறலியர் முதலிய பலரும் வந்து, தத்தமக்கேற்ற சிறப் புக்கள் பெற்றுச் சென்றனர். புலவர் பலர் மனமகிழ்ச்சி யோடு வந்து வேந்திளஞ் சிங்கத்தைப் புகழ்ந்து பாடிப் பரிசில் பெற்றனர். இருப்பிடர்த் தலையார் தாம் எண் ணிய எண்ணம் இன்றே நிறைவேறியது என்று எண்ணி, நகரகத்துள்ள திருக்கோயில்களிலெல்லாம் சிறப்பாகப் பூசனைகள் நிகழ்த்தி, விழாக் கொண்டாடினர்; ஏழை மாந்தர்க்கெல்லாம் உண்டியும் உடையும் நல்குவித்தனர். முடி சூட்டுத் திருவிழாவன்று நிகழ்ந்த சிறப்புக்களைக் காட்டிலும் நாடெங்கும் இன்று விசேஷமாகவே உற் சவங்கள் நடந்தன. துன்பமுற்றவர்க்கலால் இன்பமில்லை யன்றோ ?