பக்கம்:சோழ மன்னர்-முதற் பாகம்.djvu/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

47

________________

47 வாறு அடக்கப்பட்டனர். ஆயினும், அரசாங்க அதி காரிகள் ஆராய்ச்சிக்குப் புலப்படாமற் சிலர் மறைந் திருந்து, தம் சூழ்ச்சிகளைச் செய்து வந்தனர். திருமாவளவன் காட்டிலே சென்று அப்பகைவ னைப் போர் புரிந்து அழிக்கத் துணிந்திலன்; "அவன் தானே வெளியே வரும்போது பார்ப்போம், என்றி ருந்தான். அதுவே பொருத்தம் என்று அமைச்சருங் கூறினர். சிறிது சிறிதாகப் படைகள் திரட்டி இரண்டு மூன்றாண்டுகளிற் பகைவன் எதிர்க்கத் துணிந்தனன்.. இதற்குள் சோழ நாட்டுப் படை முன்னிருந்ததைப் போலப் பன்மடங்கு பெருகி மிக்க பயிற்சியும் பெற்றி ருந்தது என்பதை அவன் அறிந்திருந்தும், அதனைப் பொருட்படுத்தாது போர்க்குத் துணிந்து வந்தான். சேரமன்னரும் பாண்டிய வேந்தரும் அவனுக்குத் துணை புரிய விரும்பித் தத்தம் படைஞருட் பெரும்பகுதி யாளரை அனுப்பினர். தன் வலிமை மிகுந்த தாய் எண்ணிய அப்புல்லி யோன், உறையூரை முற்றுகை யிட்டான். இதனை எதிர் பார்த்திருந்த அக நாட்டவர், தம் உரிமைகளையும் உடை மைகளையும் காத்துக்கொள்ளும்பொருட்டுப் போர் புரிய முன் வந்தனர், கரிகாலனாகிய திருமாவளவனே முன் னின்று படைஞரை நடத்தினான். எளிதிலே நாட்டைக் கைக்கொள்ளலாம் என்று பெரும்படையோடு வந்த பகைவன், முன்னே என்றும் புரிந்திராத பெரும்போர் செய்ய நேரிட்டது. ஏழு நாட்கள் போர்நிகழ்ந்தது. இறு தியிற் பகைவர் படை பின் வாங்கலாயிற்று. உதவியாய் வந்த படைஞர் தத்தம் நாடு நோக்கி ஓட்டம் எடுத்தனர்.