பக்கம்:சோழ மன்னர்-முதற் பாகம்.djvu/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46

________________

46 டும். பகைஞர் எவர் வரினும், நாட்டவர் எவரும் தம் மனை வாழ்வைப் போற்றும் பொருட்டும் நாட்டின் பெரு மை அழியாது நிலை நாட்டும் பொருட்டும் முன்னின்று போர் புரிதல் வேண்டும். வலிய வந்த பகையை நாம். அடக்கவும் அழிக்கவும் வகை யறியாது அமைதியாய் இருப்போமாயின், இன்னும் பெருங்கேடு வரினும் வரும். ஆகையால், இந்த அரசுரிமையைப் பெறுதற்கு, எனக்கு உதவியாய் இருந்த தெய்வத் திருவருள் இதனை நான் உறுதியாய்க் காப்பாற்றிக்கொள்ளவும் உதவியாய் நிற்குமென்றே நம்பி, நல்லோராகிய நும் துணையால் பகைவரை அழிக்கக் கங்கணங் கட்டிக்கொண்டிருக் கிறேன். என் அருமை அம்மானாசாகிய இரும்பிடர்த் தலை யார் இனி எனக்கு அமைச்சராய் இருந்து வேண்டுவன செய்வார். நம்மால் இயன்ற நலங்களையும் எப்பொழு தும் எதிர் பார்த்தே யிருக்கிறேன். பின்பு இரும்பிடர்த் தலையார் எழுந்து, சிறிது நேரம் பேசினர். இறுதியில் அரசனை எல்லாரும் மன மார வாழ்த்தி, விடை பெற்றுச் சென்றனர். சோழ நாடு அமைதி பெற்றது. அரச முறையும், இளைஞன் தோளிற் சார்ந்திருப்பினும், நன்கு நடந்து வந்தது. அரசன் ஆண்டில் இளையானாயினும், அறிவி னில் முதியவன் என்ற புகழ் நாடெங்கும் பரவியது. முன்பு சோழ நாட்டை வலிந்து கைக்கொண்டு அரசு புரிந்து குடிகள் எழுச்சியாற் காட்டுள் மறைந்த குலப் பகைஞன், மறுமுறையும் அரசுரிமை பெறச் சூழ்ச்சிகள் செய்தனன். அவன் சூழ்ச்சிக்கு உதவியாய் நாட்டகத் திருந்த பலர் அரசவொற்றரால் அறியப்பட்டுத் தகுந்த