பக்கம்:சோழ மன்னர்-முதற் பாகம்.djvu/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

45

________________

45 புற நாட்டு வாழ்வும் அக நாட்டுச் சிறை வாழ்வும் கிடைத்ததை யான் அறிவேன். இறைவன் அருள் நமக்கு இன்பமும் துன்பமும் தருவதாம். அறிஞர்க ளாகிய நுமக்கு நான் அதிகம் கூற வேண்டுவதில்லை. இனிச் செய்தற்குரியவற்றைப் பற்றியே எண்ண வேண் டும். எக்காரணத்தாலேனும் இந்த இரண்டாண்டுகளாக நம் குடி மக்கள் பொருள்களிலும் உடைமைகளிலும் எவையேனும் அரசாங்கத்துக்குப் பறிமுதல் செய்யப் பட்டிருப்பின், இனி அவை முன்னே எவர்க்கு உரி மையோ, அவரிடம் கிரமமாகப் போய்ச் சேருமாறு வேண்டுவன செய்கின்றேன். நுமக்கு மனக் குறைகள் எவையேனும் இருப்பின், அவற்றை நம் நாட்டு அமைச் சர் மூலமும் நேராகவும் எப்பொழுது வேண்டுமென் றாலும் என்னிடம் தெரிவித்துக்கொள்ளலாம். நீவிர் அனைவீரும் நும் மனை யகங்களை யகன்று சென்ற சில நாட்களாக மிக்க சிரமப்பட்டிருக்கிறீர்கள். ஆகை யால், இனி விரைவில் நும் உரிமைகளைப் பெற்று இன் புற்று வாழுமாறு வேண்டும் முயற்சிகளைச் செய்ய முற் படவேண்டும். நம் நாடு இவ்வளவு துன்பங்களையும் அடையக் காரணனா யிருந்தவன் இன்னும் காட்டகத்தே யொளித்திருக்கின்றான். அவனும் அவனுக்கு உதவி யாய் இருப்போரும் எத்துணையரோ, நாம் அறி யோம். நம் நாட்டிலும் அரசிலும் உண்மையான அன்பு உடையார் பலர் இனி நாட்டின் வாழ்வு சீர்திருத்தம் பெறும் பொருட்டாக முயற்சி செய்ய முன்வர வேண்டி யிருக்கிறது. படைஞர் பலரைச் சேர்க்க வேண்டும். படைப் பயிற்சி நன்கு செய்விக்கப் பெறுதலும் வேண்