பக்கம்:சோழ மன்னர்-முதற் பாகம்.djvu/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52

________________

52 அங்கு அழைத்து வரக் காவலரை அனுப்புகின்றேன்.. சிறிது நேரம் இங்கேதானே இருங்கள். இவ்வாறு கூறிவிட்டுக் கரிகாலன் வெளியே சென்று, நரைத்த தலையும் தாடியும் உடைய ஒரு முதிய அரசன் போல வேடம் பூண்டு, நியாய சபையில் உன்ன தமான பீடத்தின் மீது அமர்ந்து, வாயில் காவலரை அனுப்பி, முதியவர் இருவரையும் அங்கு வருவித்தான். அவர்கள் நியாய சபைக்கு வந்தார்கள்; தாங்கள் எதிர்பார்த்த வண் ணம் நரைத்துப் பழுத்த முதியவனாகிய அரசனைக் கண் டார்கள்; அருகில் நின்றிருந்த காவலராலும் குடை கொடி முதலிய சின்னங்களாலும் அவனே அரசன் என்று துணிந்து முக மலர்ச்சி பெற்றார்கள். . கரிகாலன்:-- ஐயன்மீர், நமது பிரதிநிதியாகிய இள வரசர் நீவிர் அரியதொரு வழக்குக் கொணர்ந்திருப்ப தாய்க் கூறினர். அவ்வழக்கு இன்னதெனக் கூறின், எம்மால் இயன்ற வளவு முடிவு கூறுகிறோம். அறநூல்கள் உயர்ந்தோர் தாழ்ந்தோர், உறவினர் அயலவர், கற்றவர் கல்லார், வறியவர் எளியவர், முதியவர் இளையவர் முத லிய வேறுபாடுகள் கருதாமலே முடிவுகூறுமாறு அறுதி யிட்டிருக்கின்றன. இவ்வுண்மை நீவிர் அறியாததன்று. இனி நீவிர் நும் வழக்கை மனவமைதியோடு கூறலாம். முதன் முதியவர்:-- ஐயன்மீர், அரசர்பெருமானே, நான் கொணர்ந்திருக்கும் வழக்கிலே எதிர்வாதம் செய்ய வந்திருப்பவர் என் உடன் பிறந்த இளைய சகோதரர் ஆவார். எங்கள் இருவர்க்கும் முன்னோர் வைத்த பொ ருள் மிகக் குறைவே. அவை நிலம்புலங்களாகவும் சிறி தளவு பிற பொருளாகவும் உள்ளன. எம் முன்னோர்