பக்கம்:சோழ மன்னர்-முதற் பாகம்.djvu/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

53

________________

53 - எமக்கென வைத்த 'இரத்தின முடிச்சு' என்ற பூர்விக முதல் ஒன்று உண்டு. அஃது இப்பொழுது இவரிடமே உள்ளது. அதனை வைத்துக்கொண்டு இவர் இங்கு அமைதியாய் வாழ்ந்து வருகின்றார். நான் கடார நாட்டி லும் சாவக நாட்டிலும் பிற நாடுகளிலும் நெடுநாளாகக் கடற்றுறை வியாபாரம் செய்து பெரும்பொருள் ஈட்டி வந்துளேன். எனக்கு மனைவி மக்கள் முதலிய சுற்றத்தார் எவரும் இலர். இவர்க்கு இரண்டு ஆண் மக்களும் ஒரு பெண் மகளும் உளர். ஆண் மக்களுள் ஒருவரேனும் பெரிய முயற்சிகள் செய்து பெரும்பொருளீட்டும் ஆற் றல் படைத்தவராயில்லை. பெண் மகளோ, ஒரு வறிய உழவனை மணந்துகொண்டாள். அவன் மிகவும் இளம் பருவத்திலே அவளை யகன்று அயல் நாடுகளிற் சென்று மறைந்தான். நான் தேடி வந்த பொருளை யெல்லாம் இவருக்குக் கொடுக்கத் துணிந்தேன். இவர் அதனைப் பெற மறுப்பதோடு தம்மிடம் உள்ள பொருள்களில் ஒரு பாதி யெடுத்துக்கொள்ளச் சொல்லி வற்புறுத்து கிறார். நான் ஐம்பது வருஷ காலம் நாட்டை யகன்று, அயல் நாடுகளிலே வாழ்ந்து, சொந்த நாட்டுக்கு இப்பொ ழுதேனும் வந்து சிறிது மனவமைதி பெறுவோம் என்று எதிர்பார்த்திருந்தேன். என் எண்ணம் நிறைவேற வொட் டாமற் செய்பவர் என் சகோதரரே. நான் கூற வேண்டு வது இன்னொரு விஷபம் உண்டு: சென்ற பலவாண்டு களில் யான் தமிழ் நாட்டிலிருந்து வருவார் எவரையும் காணப் பெறாமலே காலம் கழித்து வந்தேன். ஒரு பதி னைந்து ஆண்டுகளின் முன்பு தமிழ் நாட்டு இளைஞன் ஒருவன் கடார நாட்டிலே வந்து, உண்ண உணவும்