பக்கம்:சோழ மன்னர்-முதற் பாகம்.djvu/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54

________________

- 54 உடுக்க வுடையும் இன்றி நோய் வாய்ப்பட்டு உயிர் துறக் கும் நிலையிலிருந்தான். அவன் தமிழன் என்பதை அறிந் ததும், எனக்கு அவன்பால் இரக்கம் உண்டாகி, மிக்க பொருட் செலவு செய்து தக்க மருத்துவரைக் கொண்டு அவன் பிணிகளைக் குணப்படுத்தினேன். அவன் என் மகன் போலப் பயின்று வந்தான். அவனிடம் யாதொரு குறையும் கண்டேனிலேன். பதினைந்து வருஷங்களின் முன்பு அவன் தேடுவாரின்றி எமெனொடு போராடிய காலத் திலே என்னிடம் சில செய்திகள் கூறினன். அவற் றால் அவன் என் இளையோர் மருமகன் ஆவன் என்ப தறிந்தேன். அவன் அறியாமையால் இளம்பருவத்தே செய்த ஒரு குற்றத்தை என்னிடம் வெளியிட்டான். அக்குற்றத்தை நான் இங்கே கூற விரும்புகிறேன்: அவன் பொருள் தேட வேண்டுமென்ற ஆசையால், மிகவும் இளம்பருவத்தினளாகிய மனைவியைத் துறந்து, எங்கள் பூர்விகப் பொருள்களில் ஒன்றாகிய இரத்தின முடிச்சி லிருந்து இரண்டு மாணிக்கங்களை யெடுத்துக்கொண்டு ஒருவரும் அறியா வண்ணம் கடற் பிரயாணம் செய்து, கடார நாட்டில் வந்தடைந்தான். பொருளைக் கவர்ந்த தும் மனைவியைப் பிரிந்ததும் ஆகிய இரண்டு குற்றங்க ளும் பெருந் தண்டம் விதித்தற்குரியனவே. இந்நாள் வரை அவன் அம்மாணிக்கங்களை விலைப்படுத்தாமல் என்னிடமே கொடுத்திருக்கிறான். அந்நாட்டிலே தன் உரிய மனைவியைப் பிரிந்து வாழ்ந்தனனாயினும், வேறு எப்பெண்களையும் கண்ணெடுத்தும் பாராமலே நல்லொ ழுக்க முடையவனாகவே வாழ்ந்து வந்தான். அவன் வரலாற்றை உள்ளவாறு அறிந்திருப்பவன் யானே"