பக்கம்:சோழ மன்னர்-முதற் பாகம்.djvu/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

55

________________

55 அவன் செய்த குற்றம் பெரிதேயாயினும், அக்குற்றத் துக்கு வேண்டிய அளவுக்கு மேலாக அவன் தண்டனை அனுபவித்திருக்கிறான் என்றே கூறுகிறேன். என் இளை யோர் யான் கூறியவெல்லாம் கேட்டும், அவனைத் தம் மருமகனாக ஏற்றுக்கொள்ள இசையாமல் இருக்கின் றார்; தம் அருமை மகளை அன்று மணம் புரிந்த கணவன் உயிரோடிருந்தும், அவளைக் கைம்பெண் போலவே வாழவைக்க விரும்புகின்றார். பூர்விகச் சொத்தில் எனக்கு ஒரு சிறிதும் வேண்டா. பான் தேடி வந்த பொருளை அவர் ஏற்றுக்கொள்ளாது மறுப்பாராயின், அஃது உரி மையற்ற பொருளாய் அரசினரும் பிறரும் கைக்கொள் ளப்படுவதாய் அழியும். நான் அயல் நாட்டிலே தேடிய பொருளை இவ்வரசினர் தக்க வுரிமையின்றியே கவர்ந்து கொள்வது முறையாகாது என்பதே என் எண்ணம். ஆகையால், என் வழக்கைத் தீர விசாரித்து, முடிவு கூற வேண்டுகிறேன். இரண்டாம் முதியவர்:- அரசர் பெருந்தகையே, என் முன்னவர் கூறிய வழக்கை நன்கு செவி சாய்த்தரு ளினீர். என் வழக்கையும் கேட்க வேண்டுகிறேன். என் மூத்தோராகிய இவர், எம் பெற்றோர் உயிரோடிருந்த காலத்திலேயே 'மிகவும் இளம்பருவத்திலே அயல் நாடு கட்குப் போயினர். அங்குத் தம் முயற்சியாற் பெரும் பொருளாளராய்த் திரும்பி வந்திருக்கின்றார். எம் தந் தையார் இறக்குந் தருணத்தில் எம் முன்னோர் பொரு ளாகிய எல்லாவற்றையும் என்னிடம் அளித்து, மூத்த வரை நான் திரும்பவும் காணப் பெறுவேனாயின், அவர்க் குரிய பாகத்தை முறையே கொடுத்துவிட வேண்டும்