56
________________
56 என்று கூறி யுயிர் துறந்தனர். நான் சில தினங்களின் முன்பே இவரைக் கண்டேன். கண்டதும், தந்தையார் ஆணையிட்ட வண்ணம் நடக்கத் துணிந்து, பொரு ளனைத்தையும் இரு பகுதியாகப் பகுத்து, இவர் பகு தியை இவர்க்குக் கொடுக்க வந்தேன். இவர் அதனைப் பெற மறுக்கின்றார் ; அதனோடு அமையாமல், எம் முடைய பூர்விகச் சொத்தின் உதவியின்றித் தாமாகவே தேடிய பொருளையும் என் தலையிலேயே கட்டிப் பாவச் சுமையை நானே அதிகம் சுமக்க வழி தேடுகிறார். என் மக்களுள் ஒருவன் சிறந்த புலவரை யடுத்துக் கலை பயின்று கல்வி வல்லனாயிருக்கிறான். மற்றொருவன் எம் குலத் தொழிலாகிய உழவை மேற்கொண்டிருக்கிறான். அவ்விருவர்க்கும் 'செல்வம் என்பது சிந்தையின் நிறைவே' என்ற எண்ணம் அமைந்தது. என் மகள் வரலாற்றைச் சொல்லத் தொடங்கும்போது என் நெஞ்சு புகைகின் றது. முதியோராயிருக்கும் தன் பெற்றோர்க்கு ஆற்றற்குரிய கடமைகளை முயன்று செய்யாமலும் தான் கொண்ட மனைவியை ஒரு காரணமின்றிப் பிரிந்து அவள் பொருட் டுத் தான் செய்தற்குரிய அறநெறிக் கடமையை இயற்றா மலும் அயல் நாடு சென்ற ஒரு புல்லியோனைப் பற்றி யான் ஒன்றும் சொல்ல விரும்புகிலேன். அவன் மாணிக் கங் கொண்டு சென்ற செய்தியைப்பற்றி என் மூத்தோர் வரும் வரையில் நான் ஒன்றும் அறியேன். எங்கள் மரபிலே அக்கிழியை அவிழ்த்துப் பார்த்துப் பிரிக்க வேண்டும் என்ற எண்ணம் இதுவரையில் எவர்க்கும் வந்ததில்லை. இத்தனை யாண்டுகளாகத் தன் இளம்பரு வத்தையெல்லாம் வறிதே கழித்த என் மகள் இனி இவன்