பக்கம்:சோழ மன்னர்-முதற் பாகம்.djvu/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

57

________________

57 | உறவை நாடி வாழவிரும்பாள் என்றே நான் உறுதியாய்க் கூறுவேன். ஆகையால், அரசரே, எம் முன்னோர் பொரு ளிலே செம்பாதியை என் தமையனார் பெற்றுக்கொள்ளு மாறு செய்து, நான் என் தந்தையாருக்குக் கொடுத்த வாக்கை நிறைவேற்ற உதவி புரிய வேண்டுகிறேன். இவர் பொருளிற் சிறிதளவேனும் எமக்கு வேண்டா . மருமக னாக வருவோனை என் மனம் புண்படுமாறும் என் மகள் பழந்துயரம் பெரிதாய் விளையுமாறும் நான் காணவே விரும்புகிலேன். அரசர் பிரானே தீர விசாரித்து இரு வரும் ஏற்றுக்கொள்ளத் தக்க முடிவு கூற வேண்டு கிறேன். இருவர் வழக்கையும் கேட்டு அறத் தவிசின்மீது அமர்ந்திருந்த முதிய வேட முடைய கரிகாலன் சிறிது நேரம் சிந்தனையிலிருந்து பிறகு பேசத் தொடங்கினான்: கரிகாலன்:-- ஐயன்மீர், நும் வழக்கு அரிய சிறப் புடையதே. இவ்வழக்கினை நும் ஊரகத்துள்ள அறநிலைக் களத்தே கூறினீர்களோ? அங்குளார் என்ன கூறினர்? முதன் முதியவர்:-- ஐய, இவ்வழக்கிலே அரசருக் குத் தம் கருத்தை விளக்கவுரிய அவசியம் இருப்பதால், அங்கே நேரிற் சென்று தீர்ப்புப் பெறலாம் என்று கூறி னர். யாமும் அவ்வாறே கருதினோம். கரிகாலன்:-அரசினர் அற நெறி விளக்கலன்றி வேறு எவ்வழியில் இவ்வழக்கிலே பிரவேசிக்க இடம் உளது? இரண்டாம் முதியவர்:-- ஐய, யான் என் மூத்தோர் பொருளைப் பெற மறுத்துவிட்டே னாகையாலும், அவர்க்கு என்னை யொழிய வேறு நெருங்கிய வறவினர்