58
________________
58 இல்லாமையாலும், உரிமையாளர் இன்னார் என அறியலா காது நிற்கும் அவரது பெரும்பொருளுக்கு உரிமை அவர்க் குப் பின் அரசினரதே யாமன்றோ ! இவ்வாறு பெரும் போரும் வரும் நிலையில் அரசினர் தம் கருத்தைத் தெரி விக்க வேண்டுவது அவசியமாமென நாங்கள் கருதுவது நியாயந்தானே? கரிகாலன் :- அரசனர் இப்பொருளைப் பெற உரிமை யுடையர் என்று கூறுவது பொதுவான நியாயமே. ஒரு பொருளைப் பெற வுரிமை யுடையவர் வேண்டாவென மறுத்தற்கும் உரிமையுடையவராவர் என்பது உலகறிந்த உண்மை யன்றோ? அந்த நியாயத்தைப் பின்பற்றி அரசி னர் இப்பொருள் தமக்கு வேண்டாவென மறுக்கலாம். முதன் முதியவர்:-ஆம்! ஆம்!! அதுவே பொருத் தம். யான் கூறிய காரணங்களைக் கருதிப் பார்த்து அர சினர் இப்பொருளைத் தமதென உரிமைகொண்டு ஏற் றுக் கொள்ள வராதிருக்க வேண்டும் என்பதே என் விருப்பம். கரிகாலன்:-- ஒருவர் விருப்பத்தையும் வெறுப்பை யும் எதிர் பார்த்து நியாயாதிபதிகள் தீர்ப்புக் கூறுவது என்று இருந்தால், உலகில் நியாயம் கிடைப்பதே துர்லப மாய்விடும். அற நூல்களினுட்பமான கருத்துக்கும் போக் குக்கும் அறிஞர் கொள்கைக்கும் உலகத்தார் அனுபவத் துக்கும் எது பொருத்தமாய்த் தோன்றுமோ, அதையே யாம் முடிவாகக் கூறுவோம். அரசினர் இப்பொருளில் உரிமை கொண்டாடல் பொருத்தமன்று என்பதே எம் எண்ணமா மாயினும், உமது வழக்கின் பொருட்டு நீர்