பக்கம்:சோழ மன்னர்-முதற் பாகம்.djvu/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60

________________

60 கருதுவது போல நீவிர் தேடிய பொருள் நுமக்கும் நும் சுற்றத்தவர்க்குமே பயன்பட வேண்டும் என்று கருது வது எவ்வகையில் நியாயமாம்? உமது பொருளால் வரும் பெருமை உம் நாட்டினர்க்கு உண்டாயின், அத னால் வரும பயனும் அவர்கட்குச் சிறிதளவேனும் இருத் தல் முறைதானே? சுற்றி வாழ்பவர் சுற்றத்தார் என் பது மெய்யாயின், உம்மைச் சுற்றி வாழும் எளிய மக் களும் கீழ்க் குலத்தவரும் தாமே பொருள் தேட ஆற்றல் இல்லாதிருக்கும் பிறரும் உம் சுற்றத்தாரே யாவர் என்று கூறுவது குற்றமாமோ? பிறந்த நாடு தாய் நாடு எனப்படு வது, அந்நாட்டிற் பிறந்த அனைவரையும் ஒருவர் தம் உடன் பிறந்தார் என மதிப்பதற்காக வன்றோ ? ஆகை யால், உம் பொருள் சிறிதாயினும், பெரிதாயினும், அஃது உம் நாட்டவர் அனைவர்க்கும் உரியது என்று கருதுவது சிறப்பாகும். அரசினர் நாட்டினர்க்கு நலம் புரிய அமைந்த காவலரே யாகையால், அரசினர் கையில் அளிக்கப்படும் பொருள் நாட்டினர் பொது நலத்துக்கே விநியோகிக்கப் படும். இது நிற்க. இனி வழக்குத் தீர்ப்புக் கூறத் தொடங் குவோம். இரண்டாம் முதியவர்:- அரசர் பெருமானே, இப் பொழுது கூறியதே தீர்ப்பாயிற்று. இன்னும் என்ன கூற இருக்கிறது? என் மூத்தோர் பொருளை யெல்லாம் இந்நாட்டவாக்குப் பொதுவிற் பயன்படுந் துறையில் அவரே செலவழிக்க உத்தரவிட வேண்டுகிறேன். கரிகாலன்:- ஐய, யாம் உம் முன்னோரது வாதத் திலே உள்ள ஒரு சிறு குறையை எடுத்துக் காட்டினோ மேயன்றி, இன்னும் ஒன்றும் முடிவு கூறவில்லை. உமது