பக்கம்:சோழ மன்னர்-முதற் பாகம்.djvu/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

61

________________

வாதத்திலும் ஒரு குறையுளது : உமக்குப் பொருளிலே ஆசையில்லா திருக்கலாம். உம் மக்களுக்கும் அவ்வண்ண மே நிராசை யிருக்க வேண்டும் என்பது என்ன நியதி? பொருள் மிகுதி வருதலால், நன்மை விளையாது என்று நீர் கருதுகிறீர். புலமை படைத்திருக்கும் உமது மூத்த மைந்தர் இனிச் செய்ய விருப்ப தென்ன? தாம் கற்ற கல்வியைப் பிறர்க்குக் கற்பித்தலன்றோ கற்றதனாலாய பயனாம்? புலமை படைத்த ஒருவர் நூற்றுக் கணக்கான மாணாக்கர்கட்கு உண்டியும் உடையும் பிற அவசியப் பொருள்களும் உதவிக் கல்வி கற்பிக்கும் நிலைமை பெறு தல் சிறப்பன்றோ ? முன்னோர் இயற்றியருளிய இய லிசை நாடக நூல்களையும் பிற சாஸ்திரங்களையும் பலர்க் கும் பயன்படுமாறு பிரதிகள் பல செய்து, ஏடுகளை முறைப்படுத்தி, நூற்கருவூலம் ஒன்று அமைப்பது கல்வி வல்லார் செய்யத்தக்க செயலே யன்றோ? புது நூல்கள் இயற்றினும், பல பிரதிகள் செய்து பலர்க்கு உதவ வேண்டுமே? இவ்வகை அரும்பணிகளை யெல்லாம் இயற்றக் கல்வி வல்லார்க்கும் செல்வப் பொருளின் உதவி அவசியம் வேண்டுவதே என்பது வெளியாகும். வேளாண்மையும் அமைந்த வுள்ளமும் பொருத்தமே யாயினும், விருந்திருக்க உண்ணலாகாத வேளாளன் உண்மையான வேளாண்மை யாற்ற விரும்புவானாயின், பெரும்பொரு ளுடையானா யிருத்தல் வேண்டு மன்றோ? பிறர்க்குப் பயன்படும் பொருட்டன்றே வேளாளன் பொருள் பெறுவது? எவ்வளவு பொருளிருந்தால் என்ன? குறைவாய் இருந்தாற் சிலர்க்குப் பயன்படு கிறது; நிறைய இருந்தாற் பலர்க்குப் பயன்படுகிறது.