பக்கம்:சோழ மன்னர்-முதற் பாகம்.djvu/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62

________________

62 இவ்வுண்மையை ஊகித்துணராமல்,நீர் கூறியது பொருந் துமா? உம் மருமகனைப் பற்றி நீர் கூறுவதில் உள்ள குறை யொன்றே. அவர் இளமையில் அறியாமையாற் செய்த இரண்டு குற்றங்களுக்காக வேண்டுமளவு தண் டனை யனுபவித்துவிட்டார். நும் மகளைப் பிரிய வேண்டு மென்றே அவர் எண்ணமுடையரா யிருந்திருப்பின், அயல் நாட்டகத்தே புது மணம் நிகழ்த்திக்கொண்டிருக்க லாம். நும் மாணிக்கங்களையுந் திரும்பக்கொண்டுவந் திருக்கிறார். அவர் நடத்தையைப் பற்றிய ஆராய்ச்சி ஒரு புறமிருக்க, நும் மகள் இத்துணை யாண்டுகளாக அடைந் திருந்த மனத் துயரை நீர் அறிந்திருந்தால், இவ்வாறு கூறியிருக்க மாட்டீர். நம் நாட்டிலே பெண்டிர்க்குக் கொழுநனே தெய்வம் என்ற அறிஞருரை பரவியுளது. அவன் குரூபியாயினும், குணக் கேடனாயினும், பல வாண்டுகள் பிரிந்து சென்றவனே யாயினும், அவனே அவர்க்கு உவப்பிற்குரியான். எத்துணை யாண்டுகள் கழிந்து வந்தாலும், உடைமை உடையான தாகுமே யன் றிப் பிறர தாய்விடுமோ? நும் மகள் இத்துணை நாளும் அனுபவித்த துயரத்தை யெல்லாம் தன் கணவன் வரலாற்றை யெல்லாம் உள்ளவாறு கேட்டு உணர்வா ளாயின், மறந்துவிடுவாள். முன்னே யிருந்த துக்க மெல்லாம் மாறி இப்பொழுது, “அவரை என்று காண் போம்? எப்பொழுது திரும்பவும் நாம் மனை வாழ்க்கை மற்றவர்களைப்போல நடத்தப் பெறுவோம்?” என்ற எண் ணமே முற்பட்டு நிற்கும். பெண்டிர்க்கு இயல்பாகவுள்ள மன நிலை இதுவாம். இஃது ஒன்றையும் அறியாதவர் போல நீர் நும் மகளை மருமகனிடமிருந்து இனியும்