பக்கம்:சோழ மன்னர்-முதற் பாகம்.djvu/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

63

________________

பிரித்து வைக்கக் கருதிப் பிடிவாதம் செய்வது பொருத்த மாகாது. நும் வாதங்களிலே குறை கண்டது இவ்வள வில் நிற்க. இனி வழக்கின் தீர்ப்பைக் கூறுகின்றோம். இருவரும்:- அரசர் பெருமானே, இனித் தீர்ப்பு எவ்வண்ணம் வரும் என்பதை யாங்களே ஒருவாறு ஊகிக்கலாம். கரிகாலன்:- முதியவர்களே, கேளுங்கள்: இளை யோர்தம் பெற்றோர்க்குக் கொடுத்த வாக்கைக் காப்பாற்ற வேண்டுவது அவசியமே. அதற்கிணங்க அவர் தம் மிடமுள்ள எல்லாப் பொருள்களிலும் செம்பாதியை மூத்தவர்க்குக் கொடுத்துவிட வேண்டும். மூத்தவர் தம் உரிமையை மறுக்காது ஏற்றுக்கொள்ளவே வேண்டும். மூத்தவர் தாமாகத் தேடிய பொருள் அனைத்தையும் இப்பொழுது பெறும் முன்னோர் பொருளையும் சேர்த்து ஆண்டு அனுபவிக்க வேண்டும். அவர் மருமகப் பிள்ளை யையே இந்நாள்காறும் புத்திரன் போலப் பாவித்திருந்தா ராயினும், தம் பொருளனைத்தையும் மூவர்க்கும் சமபாக மாகக்கொடுக்கலாம்; தம்உயிருள்ளவரையில் தம்இஷ்டப் படி தர்மங்கள் செய்ததன் பிறகு பாகித்துக் கொடுத்தலே சிறப்பாம். கல்வி வல்ல மகனுக்கு நாம் முன்னே கூறிய வாறு கல்விவளர்ச்சிக்கான உதவியை இன்றிருந்தே அவர் செய்யத் தொடங்கலாம். மற்ற இருவர்க்கும் நிலங் களை வாங்கிக் கொடுத்து, அறம் வளர்க்கலாம். முன் னோரது பெயரை நிலை நிறுத்த வேண்டுவது மக்கள் கட மையாமாகையால், உங்கள் முன்னோர் பெயரால் உங் கள் ஊரிற் பெரியதொரு வைத்திய சாலையும் தமிழ்க் கலா சாலையும் அன்ன சத்திரமும் ஸ்தாபனம் செய்ய