உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சோழ மன்னர்-முதற் பாகம்.djvu/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64

________________

64 லாம். அவற்றை நீவிர் இருவீரும் நும் மக்களும் முறையே மேற்பார்த்து வரவேண்டும். அரசினரது ஆதரவோ, மேற் பார்வையோ, அவற்றுக்கு வேண்டும் என நீவிர் எப்பொழுதேனும் எண்ணுவீராயின், அப் பொழுது உரிய முறையால் விண்ணப்பம் செய்து கொண்டால், எம்மால் வேண்டுமளவுக்கு உதவி செய்யப் படும். நும் மருமகன் முன்னே செய்திருந்த இரு குறை களும் பொறுக்கப்பட்டன. அவர் இனி நும்மோடு ஒரே குடும்பமாகவேனும் தனித்தேனும் வாழ்ந்துவர வேண் டிய உதவிகள் செய்ய வேண்டும். அவர் மனைவியை அவ ரிடம் கையளித்து, இனி அவ்விருவரும் நன்கு மன மொத்து இன்புற்று வாழ்ந்து வர ஆவன செய்ய வேண் டும். உயிரோடு கணவன் இருக்கையில் எக்காரணத் தைக் கொண்டும் மனைவி அவனை யகன்று பிறந்த வீட் டில் வாழ்த லாகாது என்பது பொதுவற நெறியாம். அதற்கிணங்கவும், இந்நாள் வரைக்கும் தனிமையின் சுவையை யறிந்த இருவரும் இனியேனும் உலக வாழ் வில் ஆடவரும் பெண்டிரும் பிரிந்து வாழ்தலைக்காட்டி லும் சேர்ந்து வாழ்தலே இறைவன் அருளுக்கு இயைந்த தாம் என அறிய வுதவுமாறும், அவர்களை அவர்கட் குரிய பொருளைக் கொடுத்து வாழச் செய்தல் வேண்டும். பெற்றோர்க்கு ஆற்றற்குரிய கடமைகளை இனி முறைதவ றாது அவ்விருவரும் மன மொருமித்து ஆற்றி வரக் கட வர். இதுவே நுமக்கு யாம் கூறும் முடிவாம். இருவரும்:- இதுவே எம்மிருவர்க்கும் திருப்தி யான முடிபு. இத்தகைய தீர்ப்புப் பெறலாம் என்று எதிர் பார்த்துத்தானே இங்கு வந்தோம்?