பக்கம்:சோழ மன்னர்-முதற் பாகம்.djvu/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

65

________________

65 கரிகாலன்:-- இறுதியில் நாம் கூற வேண்டுவ தொன்றுண்டு: முதற்கண் நீவிர் வரும்போது நும் வழக் கை முதியவர் ஒருவரே தீர்த்து முடிவு கூறற்குரியரென எண்ணினீர். இதுவரையில் நம் விருப்பத்திற் கிணங்க யாம் முதிய அரசராய் இருந்தோம். இனி முன்போல இளமை தாங்கலாம் என்று எண்ணுகிறோம். (முதிய வேடம் களைந்தனன்.) இருவரும்:- என்ன! நாங்கள் அங்கே கண்ட இளைஞரேயோ இவ்வழக்குத் தீர்த்த அரசர் பிரான் ? எம் அரசர் பெருந்தகையை யாம் அறியா திருந்தது - பெருங்குறையே. கரிகாலன்:- இளமையும் முதுமையும் என்ன செய்யும்? அறிவு ஒன்று இருந்தால், எல்லாப் பருவ மும் நன்றே. எமக்கு மேன்மேலும் உம்மைப் போன்ற பெரியோர்கள் வாழ்த்துரைகளால் அவ்வறிவு வளர வேண்டு மென்பதே விருப்பமாம். இருவரும்:- அரசரே, யாங்கள் அறியாது கூறிய வற்றைப் பொறுத்தருள வேண்டுகிறோம். இனி நாங் கள் விடை பெறுகிறோம். கரிகாலன்:- அங்ஙனமே யாகுக.