பக்கம்:சோழ மன்னர்-முதற் பாகம்.djvu/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

________________

- VII சோழ நாட்டுப் படைஞர் மேன்மேலும் போர் புரிய வேண்டும் என்ற விருப்பமுடைய ராயினர். இள வள ஞாயிறுபோன்று சோழர் குடியிலே உதித்த கரிகால னும் பிற மன்னரை வென்று புகழ்பெற வேண்டும் என்ற அவா வுடையனாயினன். இவற்றை யறிந்த இரும்பிடர்த் தலையாரும் பிற அமைச்சரும், உள் நாட்டு மறவர் தொகையை வளர்த்தற்கு உரிய முயற்சிகள் எல்லாம் செய்தனர். முதலிலே முன்னைப் போரில் இந்நாட்டு அரசுரிமை நாடிய கொடியோனுக்கு உதவியாய் நின்ற சேர பாண்டியரைப் போரில் வெல்ல வேண்டும் என்ற எண்ணம் சோழன் உள்ளத்தே குடி கொண்டது. அதற் கிணங்க, அவ்விரு நாடுகட்கும் தூது போக்கிப் பெரும் படையோடு போரியற்ற வருவதாய்த் தெரிவித்தனன். தூதர் கூறிய செய்தி கேட்ட சேரனும் பாண்டிய னும், தத்தம் நாட்டகத்தே இளைஞனாகிய சோழன் போர் புரியத் துணிந்தது கண்டு மனம் பொறாது, அவன் நாட்டிலேயே அவனை யெதிர்க்கத் துணிந்து, பெரும் படையோடு சோழ நாட்டுள் இருக்கின்ற வெண்ணி யென்ற சிற்றூர் வரை வந்தனர்; தூதர் மூலம் தாம் வந்த செய்தியைச் சோழனுக்கு அறிவித்தனர். இந்தச் சந்தர்ப்பத்தை எதிர் பார்த்திருந்த அவனும், தன் படை