பக்கம்:சோழ மன்னர்-முதற் பாகம்.djvu/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

67

________________

67 ஞரை ஒன்று சேர்த்து, வெண்ணியை அடைந்தனன். அவ்வூர்ப் புறத்தே குடி மக்கட்குப் பயன்படாதிருந்த பெரியதொரு பறந்தலையில் இரு திறத்தினரும் நெருங்கி நின்று போர் புரியத் தொடங்கினர். சேரர் படைஞரும் பாண்டியன் மறவரும், தமது - புகழ் அழியாதிருக்க முயல்வாராய், இயன்றளவு போர் புரிந்தனர். தெய்வச் செயல் அவர்க்கு உதவியாய் முன் னிற்கவில்லை. அதனாற் கரிகாலன் படைஞர் முன் நிற்க லாற்றாது உயிர் துறந்து மடிந்த பல்லாயிரவர் களத்திலே கிடக்க, எஞ்சியிருந்தாருள் ஒரு சிலர் புறங்கொடுக்கவும் துணிந்தனர். பாண்டியன் இருந்த இடம் தெரியாது மறைந்தான். உதவியாக வந்த வேளிர் பதினொருவரும் அவர் தம் படையும் சென்ற இடம் தெரியவில்லை. இந் நிலையில் வீரருள் வீரனாகிய பெருஞ்சேரலாதன் என்ற சேர மன்னன், தன்னால் இயன்ற வளவு படைஞரை ஊக்கி முன் செலுத்தி நின்று, போர் புரிந்தான்; படை ஞர் பிறர் கதியைக் கண்டு புறங்கொடுக்க எண்ணுவதை அறிந்து, அவர்க்கு ஊக்கம் வருவிக்கும் பொருட்டுப் பல பக்கங்களிலும் சென்று திரிந்து, ஆங்காங்குச் சித றிக் கிடந்த பல் வகையாரையும் ஒருங்கு சேர்த்தான்; சோழர் படைஞரைக் கண்ட இடங்களி லெல்லாம் கொன்று குவித்தான். அக்காட்சியைக் கண்ட கரிகாலன், பெருந்திரளான படைஞரோடு எதிர் சென்று, அவனைத் தாக்கினன். சோழன் என்ற பெயர் கேட்ட வளவிலே அங்கிருந்த பகைவர் திறத்து மறவரெல்லாம், தம் தலை வர் எவ்வளவோ உற்சாகப்படுத்தியும் எதிர்த்து நிற்க லாற்றாது, புறங்கொடுத்தனர்.