பக்கம்:சோழ மன்னர்-முதற் பாகம்.djvu/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68

________________

அக்காட்சியைக் கண்டு பொறாத பெருஞ்சேரலாதன், தன் படைஞரைக் கறுத்து விழித்து, " வீரர்களே, (தோன்றிற் புகழொடு தோன்றுக ; அஃதிலார் தோன்றலிற் றோன்றாமை நன்று,' என்ற அறவுரையை நீவிர் மறந்தீர். வெற்றி பெற்றாற் பெரும்புகழ் பெறுவீர்; போர்க் களத் திலே இறந்தால், வீரசொர்க்கம் புகுவீர். இவ்விரு வகை யான உயர் வாழ்வையும் இழக்குமாறு நீவிர் புறங் கொடுக்கத் துணிந்தது புதுமையே! இன்று புறங் கொடுத்து நும் மனையகம் செல்வீராயின், அங்கு நும் அன்பின் செல்வங்கள் நும்மை அன்போடு வரவேற்கும் என்று எண்ணுகின்றீரோ? நும் மனைவிமார் புறப் புண் பட்டு நீவிர் ஓடி வந்த செயலை அறிந்ததும், நும் முகத்தில் விழியாது, தம் மனைக் கதவங்களை அடைப்பர். மறப் பெண்டிர்க்குத் தம் கணவன்மாரை இவ்வாறு காண்பதி னும் இழிவு என்னை? அவர் நும்மை நாட்டுள் நுழைய விடார். அவரும் நம் கண் முன்னே தீப்பாய்வர். நும் மக்களுள் மிக விளஞ்சிறார் நும் செயல் கேட்டு நும்மை வெறுப்பர். ஆதலால், இறத்தலே அறத்தின் ஆறு. இறந்து பெறும் பெருமை, இறவாப் புகழேயாம். இற வாது அடையும் இழிவு வெற்றியில்லாத தோல்வியினால் வளர்ந்து உயிரோடிருந்தும் நடைப் பிணங்களாகச் செய் யும். இன்று மானம் இழந்தால், இனி என்றும் திரும்பப் பெற இயலாது. போரில் முனைந்து முன்னே செல்லுங் கள்," என்று தூண்டினன். பெருஞ்சேரலாதன் சிறந்த போர் வீரனேயாயினும், பலவாண்டுகளாகப் பெரும்போர்களிலே பயின்ற பயிற்சி யுடையனே யாயினும், கரிகாலன் திருமாவளவனது