பக்கம்:சோழ மன்னர்-முதற் பாகம்.djvu/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

69

________________

'போர்த்திறங் கண்டு அதிசயித்தான்; அவனது வில்லி லிருந்து புறப்படும் அம்புகள் பாயும் வேகத்தைப் பார்த் தான்; அவனது வாள் எண்ணற்ற மறவரை இமைப் பொழுதிலே கொன்று குவிக்கும் அதிசயக் காட்சியைக் கண்டான்; விற்போரும் வாட்போரும் மாறி மாறி நடை பெறும் தன்மையை உணர்ந்தான்; தானும் வில்லுங் கையுமாய்ச் சோழனைத் தாக்க முன்னே பாய்ந்தான்; பாயும்பொழுது பின்னுளோர் தொடர்ந்து வருகின்ற னரா' என்று அறியும்பொருட்டு ஒரு கணப் பொழுது திரும்பிப் பார்த்துப் பிறகு முன்னோக்கினான். வீரர் இருவரும் கடும்போர் புரிந்தனர். மாலைக் காலம் குறு கியது. இரவும் நெருங்கியது. வெற்றி சோழனதே என்று கூறும் நிலைமை வந்தது. மன்னர் இருவரும் தத்தம் பாசறை யடைந்தனர். சேரன் உடம்பெல்லாம் புண்ணாய் மயங்கினன். புறத்திலும் அம்பு பாய்ந்த புண் ஒன்று இருப்பதை உணர்ந்தான். புறங்கொடுக்காமலே போர் புரிந்த தனக்கு இப்புறப்புண் நேரிட்ட காரணத்தையும் சந்தர்ப்பத்தை யும் நினைத்துப் பார்க்கலாயினன். மறவர்களைத் தூண் டித் தான் முன்னே பாய்ந்த பொழுது கரிகாலன் அம்பு சொரிந்து கொண்டு முன்னின்ற காட்சி நினைவுக்கு வந் தது. அவ்வமயத்தே மறவர் தொடர்ந்து வருகின்ற னரா என்று ஒரு கணப் பொழுது தான் திரும்பிய காலத்தே இந்த அம்பு புறத்தே பாய்ந்திருக்க வேண்டும் என்று. அறிந்தான். போரிற் புறங் கொடுத்துப் புறப் புண் படுதலும் புறங் கொடுத்தார்மீது அம்பெய்தலும் போரற நெறிக்கு விலக்கு என்பதை அவன் அறிவான்;