பக்கம்:சோழ மன்னர்-முதற் பாகம்.djvu/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70

________________

70 மறவர் பலர் உடம்பெல்லாம் புண்ணாகி மயங்கிக் கிடக் கும் காட்சியைக் கண்டான்; மனம் புண்ணானான்; பாச றைப் புறத்தே உலவிக்கொண்டிருந்தான்; அப்பொழுது பாண்டிய மன்னரும் பதினொரு வேளிரும் அன்று நிகழ்ந்த பெரும்போரிலே புறங்கொடாது போர் புரிந்து வீர சொர்க்கம் புகுந்த செய்தி கேட்டான்; அவர்க்குக் கிடைத்த பெருமை தனக்கு இல்லாது போயிற்றே என எண்ணமிட்டுப் பெரிதும் வருந்தினான்; புறப்புண்பட்டுப் பழி பூண்டு வாழ்வதைக்காட்டிலும் இறப்பதே சிறப்பாம் என எண்ணினான். சான்றோர் பலரால் எப்பொழுதும் சூழப்பட்டிருக் கும் பெருஞ்சேரலாதன் தன் உள்ளக் கிடக்கையை அவர்கட்குக் கூறத் தொடங்கி, " ஐயன்மீர், ஒருவன் தான் பிறந்த குடிக்குப் பெரும்பழி விளைக்குமாறு உயி ரோடு வாழ்வதைக்காட்டிலும், இறந்து உயர்ந்த உலகம் புகுவது சிறப்புடையதா மன்றோ? ஆண்டில் இளைஞ னும், நன்கு போர்ப் பயிற்சி பெறாதவனும், பிறருடைய உதவி பெறாதவனுமாகிய கரிகாற் சோழன் இன்று இயற் றிய போரிலே யான் அடைந்த பரிபவம் எளிதில் என் னால் மறக்கத் தக்க தன்றாம். மனந்தளர்ந்த படைஞரை ஊக்கும் பொருட்டு நான் திரும்பியபோது 'ஓர் அம்பு என் முதுகின்மீது பாய்ந்தது. 'புறப் புண்படும் போர் வீரன் தான் பிறந்த நாட்டுக்கும் தனக்கும் தன் குடிக் கும் இழிவு வருவிப்பவனே யாவன்,' என்பது நீவிர் அறியாத தன்று. ஆகையால், இனி யான் உணவும் நீரும் துறந்து, வடக்கு நோக்கி யிருந்து, உயிர் விடத் துணிந்தேன்," என்றனன்.