பக்கம்:சோழ மன்னர்-முதற் பாகம்.djvu/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

71

________________

அது கேட்ட சான்றோர், "புரவலரேறே, புறப்புண் படுதல் என்பதன் பொருளை நீ நன்கறிவை. யாங்களும் அறிவோம். ஒருவன் தன்னோடொரு நிகராகிய பகை வீரனோடு போர் செய்கையிற் போருக்காற்றாது போர்க் களத்துப் புறங் கொடுத்து ஒடுதல் பழியேயாம். அவ் வாறு ஒடும் ஒருவன் புறத்தே பகைவன் அம்பு பாய்ந்து புண் நேரிடுமாயின், அது புறப்புண்ணாகும். புறங்கொடுத் தார்மீது அம்பெய்தலாகாது என்ற அற நெறி நீ அறி யாத தொன் றன்று. திருமாவளவன் சிறுவனே யெனி னும், இவ்வற நெறியை அறியானல்லன். அவன் புறங் கொடுத்தார்மீது அம்பெய்யும் கீழ் மக்கள் குலத்திற் பிறந்தானல்லன். நீயும் போர்க்குப் புறங் கொடுப்போர் குலத்திற் பிறந்தாயல்லை. எதிர் பாராமல் நேர்ந்த இச்செயலில் இருவரும் மனம் வருந்தற் கேதுவில்லை. நீவிர் இருவீரும் ஒருவர் மேல் ஒருவர் பாய்ந்து அம் பினை எய்யும்போது நீ சற்றே பின் புறம் திரும்பினாய். அது பகைவனது போர்த் திறத்தைக் கண்டு அஞ்சியதா லன்று; நினக்கு அவனை யெதிர்த்து நின்று போர் புரிய ஆற்றல் இல்லாமையாலன்று ; விற்போரும் வாட்போரும் முறையே புரிய அறியாமையாலன்று ; தளர்ந்த உள்ளத் தோடு நின் பின் வந்த படைஞர் அணி வகுப்புக் குலை யாது முறையே வருகின்றனரா வென்று பார்த்து அறிந்துகொள்வதன் பொருட்டேயாம். ஆகையால், நீ திரும்பியது புறக்கொடையாகாது. நின் முதுகின்கண் கரிகாலன் அம்பு பாய்ந்தது அவன் மனமுற எண்ணிச் செய்த செய்கையுமாகாது. ஆகையாற் குற்றமாகாத வொன்றைக் குற்றமாகக் கருதி மனம் புண்ணாகி நீ வடக்