உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சோழ மன்னர்-முதற் பாகம்.djvu/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72

________________

72 கிருக்கத் துணிவது பொருத்தமாக எமக்குத் தோன்ற வில்லை,” என்று அன்பினாற் கூறினர். அந்நல்லுரையைக் கேட்ட சேர வேந்தன், “சான் றோர்களே, நீவிர் என்னிடம் கொண்ட அன்பு காரண மாக இவ்வாறு பரிந்து கூறுகின்றீராயினும், நும் உள்ளக் கிடக்கை என் மனப்போக்குக்கு மாறுபடாது என்பதை அறிவேன். என் குடிப் புகழ்க்கு மாசு தரும் ஒரு செய் கையை யான் செய்ய வேண்டும் என நீவிர் விரும்புகினீர். வீரர்க்குரிய போர் முறையை விதித்த அற நூல்களிலே, வீரராயிருப்பார் போர்க் களத்திற் புறப்புண் படுதல் இழிவு என்று கூறும் இடங்களில் எங்கேனும், 'இன்ன விதம் பெற்ற புறப்புண்ணே புறப்புண்ணாம் ; மற்றவை ஆகா,' என்று விதித்திருக்கின்றதா? அஃது எவ்வாறு அமையினும், புறப்புண் புறப்புண்தானே ? அயர்ப்பிலே பட்டதாயின், விழுப்புண் ஆய்விடுமோ? வீரர் எனப் படுவோர் விழுப்புண்பட்டுப் போரில் இறத்தல்வேண்டும். அவ்வாறு இறக்கும் பேறு பெறாராயின், வடக்கிருத்தல் வேண்டும். இவ்விரண்டும் ஒருவர்க்கு அமையாவாயின், அவர் ஆண்மை பீடிழந்ததே; தேகப்பயிற்சி வீண்முயற் சியேயாம். ஆகையால், என் மனத்தில் தோன்றிய எண் ணத்தை மாற்ற முயன்று யான் பெறக் கருதும் நல்வாழ் வைப் பெறற்கு இடையூறு செய்யாது நுங்களால் இயன்ற உதவி புரிய வேண்டுகிறேன்,” என்றான். இம்மொழியைக் கேட்ட அந்நல்லோர்கள், 'நீ நினக்கு நேர்ந்ததாக எண்ணும் பழிப்பைப்பற்றி அறநூல் களின் கருத்தை எம் உள்ளத்தில் தோன்றியவாறு கூறி னோமே யன்றி, நினக்கு வரும் நல்வாழ்வைத் தடுக்கும்