பக்கம்:சோழ மன்னர்-முதற் பாகம்.djvu/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

vii அம்மானாராவர் என்றும் அவர் உதவியால் அவன் இழந்த அரசு பெற்றான் என்று வழங்கும் பழஞ்செய்தியும் இந் நூற்றொகையிலே தக்கவாறு ஆளப்பட்டுள்ளன. இங்கு இரும்பிடர்த் தலையார் அழுந்தூர் வேளின் மைந்தராவர் என்று கூறப்பட்டிருப்பது புதுமையேயாயினும், ஒரு வாறு பொருந்துவதாக அறிஞர் ஏற்பர் என்று கருதி அமைக்கப்பட்டது. கரிகாலன் புகார் நகர் அமைத்தான் என்று வழங்கும் பழஞ்செய்தி தக்கவாறு பயன்படுத் 'தப்பட்டது. சிலப்பதிகாரத்தில் வரும் வட நாட்டுப் போரைப் பற்றிய செய்திகள் அங்கு உள்ள வண்ணமே கொள்ளப்பட்டன. இந்நாளைச் சரித்திராசிரியர். ஸ்ரீமான் பி. தி. ஸ்ரீநிவாஸ ஐயங்கார் இச்செய்திகளை உண்மைச் செய்திகளாக நம்பலாகாது என்று தமிழர் வரலாற்றிலே கூறுகின்றாராயினும், பண்டைச் செய்யுட்களின் ஆதரவு இங்கு ஏற்றுக்கொள்ளப்பட்டது. கரிகாலன் மக்கட் பேற்றைப்பற்றிப் பலர் பலவாறு கூறுவராகையால், அக் கொள்கைகளை ஆராய்ந்து முடிவுகட்டும் அரும்பணியில் இறங்காமல், பொதுமையாக அக்கருத்துக்கள் ஏற்றுக் 'கொள்ளப்பட்டன. ஆதிமந்தியார் கரிகாலன் மகளார் ஆவர் என்று அறிஞர் கருதுதலால், அவர் வரலாறு இங்கு உரிய விடத்திலே சேர்க்கப்பட்டது. இவ்வாறு புதுமையும் பழமையும் கலந்தே யிருப்பது அறிஞர்க்குப் புலப்படும். நலங்கிள்ளியின் வரலாற்றிலே போர்ச் செய்தியே பெரும்பான்மையா மாகையால், கோவூர் கிழாரின் உண் மைப் பெருமைகளை விளக்குஞ் செய்திகள் அதன்கண் விளக்கப்பட்டன. மாவளத்தான் என்ற இளையோன் வர