பக்கம்:சோழ மன்னர்-முதற் பாகம்.djvu/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

vi உரைமுடிவு காணான் இளமையோன் என்ற நரைமுது மக்கள் உவப்ப-நரைமுடித்துச் சொல்லால் முறைசெய்தான் சோழன்: குலவிச்சை கல்லாமற் பாகம் படும். 'கழுமலத்து யாத்த களிறுங் கருவூர் விழுமியோன் மேற்சென் றதனால்--விழுமிய வேண்டினும் வேண்டா விடினும் உறற்பால தீண்டா விடுதல் அரிது." “ சுடப்பட் டுயிருய்ந்த சோழன் மகனும் பிடர்த்தலைப் பேரானைப் பெற்றுக்-கடைக்கால் செயிரறு செங்கோல் செலீஇயினான்: இல்லை உயிருடையோர் எய்தா வினை. என்ற செய்யுட்களும் அவற்றின் உரையும் கரிகாலன் வரலாற்றை விரித்தெழுதக் கருவியாயின. கரிகாலன் உண்மை வரலாற்றைப்பற்றி இக்காலத்து வெளி வந் துள்ள புத்தகங்களுக்கும் இந்நூற்றொகைக்கும் சில வகையில் வேறுபாடுகள் உண்டு. பழமொழிச் செய்யுட் களில் உள்ள ஒவ்வொரு நிகழ்ச்சியும் கண்கூடாகக் கண்டோர் கூறுமாறு விளக்கப்பட்டுள. கரிகாலன் தந்தை யின் பெயர் உருவப் பஃறே ரிளஞ்சேட்சென்னி யென் பதைப் பண்டை நூல்களால் அறிவோம். அவன் பெயர் இளஞ்சேட்சென்னி யென் றிருத்தலால், மூத்தவனாகிய சேட்சென்னி யொருவன் இருந்தான் என்று இந்நூற் றொகையிலே கொள்ளப்பட்டுள்ளது. கரிகாலன் தந்தை அழுந்தூர் வேளிடை மகட்கொண்டான் என்று வழங் கும் பழஞ்செய்தியும், இரும்பிடர்த் தலையார் கரிகாலனுக்கு