பக்கம்:சோழ மன்னர்-முதற் பாகம்.djvu/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76

________________

76 சிறையகத்திட்டு நாட்டை யகல்வித்துத் துன்புறுத்திய தீயோனுக்கு இவரனை வரும் உதவியாய் இருந்தனராகை யால், யான் என் குலப் பெருமையை நிலை நாட்டற் பொருட்டு இம்முயற்சியில் இறங்க வேண்டுவது அவசிய மாயிற்று. என் நாட்டவர் உதவியால் இப்போர் நன்கு நிறைவேறியது. விளைந்த பயன் சிலர்க்குத் துன்பம்தருவ தாயினும், தமிழ் நாடு முழுமைக்கும் அரசுரிமை யுடை யான் ஒருவன் என உறுதிப்படுத்த உதவுவதாகையால், ஒரு வகையில் நலம் தருவதேயாம். புலமைச் செல்வி யீர், நும் மனக் கருத்தை யான் உணர்ந்தேன். மனிதர் புகழ் பெறுதற்கு வழி இரண்டேயுள்: ஒன்று தம்மை மறந்து அறஞ் செய்தல்; மற்றொன்று அவ்வண்ணமே அறப்போர் புரிதல். அறப்போர் புரிந்தார் இறந்தாலும், இருந்தாலும், புகழே பெறுவர் என்று நும்போன்ற பெரியார் கூறக் கேட்டிருக்கின்றேன், என்று கூறினன். இச்செய்தி கேட்ட வெண்ணிக் குயத்தியார், மன வமைதி பெற்றுக் கரிகாலனிடமும் இரும்பிடர்த் தலை யாரிடமும் விடை பெற்றுச் சென்றார். அப்போர்க் களத்தே இறந்தார் ஒழிய, எஞ்சி யிருந்த பகை வீரர் அனைவரும் கரிகாலனைப் பணிந்து வணங்கினர். வெற்றி முரசு எங்கும் முழங்கியது. சோழர் குல்ச்சுடர் மணியா கிய திருமாவளவன், புலவரும் பாணரும் கூத்தரும் பொருநரும் விறலியரும் புகழ்ந்து பாடிப் பின்வர, மங்கல வாத்திய கோஷங்களுக்கிடையில் உறையூர் நோக்கித் திரும்பினான். அன்புடைய குடி மக்கள் பலர் எதிர்கொண்டழைக் கக் கரிகாலன் உறையூர் வந்து புகுந்தான்; அரண்மனை