பக்கம்:சோழ மன்னர்-முதற் பாகம்.djvu/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

77

________________

புகுந்து, அத்தாணி மண்டபம் அடைந்தான். அங்கு அரசனைக் காணவெண்ணி முன்னரே வந்து குழுமி யிருந்த பெரியார் பலரும் எழுந்து நின்று, அவனை மன மார வாழ்த்தினர். புலவர் ஒருவர் எழுந்து நின்று, இரு. கரங்களையும் உயர்த்தி, " தமிழகத் தலைமை தாங்கிய வளவ! பழியொடு படரா வழுதியர் தமையும் வீரருள் வீரராம் சேரலர் வேந்தையும் பதினொரு வேளிர் படைஞர் தம்மையும் வென்று களங்கொளும் வேந்தே! வாழிய நிலமெலாம் புரந்து நீடூவா ழியவே. என்று மனமார வாழ்த்திப் புகழ்ந்து பாடினர். கரிகாலன் அவ்வாழ்த்துரை கேட்டு மிக மகிழ்ந்து, அவையகத்தாரைப் பார்த்து, பெரியீர்காள், நுங்கள் ஆசீர் வசனத்தாலும் இறைவன் திருவருளாலும் சில நாட்களின் முன்பு தொடங்கிய தமிழகத்துப் பெரும் போரிலே யாம் வெற்றி பெற்றோம். நம்நாட்டின் வளத்தை வளர்க்கவும் வீரரது வீரத்தை விருத்தி செய்யவும் விரும்புவோமாயின், மேலும் மேலும் போர் புரிந்து பல நாடுகளை வெல்ல வேண்டும். அவ்வாறு வென்று இப் பாரத பூமி முழுவதையும் ஒரு குடைக்கீழ் அடக்கி யாண்ட மன்னர்கள் பிறந்த குடியிலே பிறந்து, அவரது புகழை வளர்க்க விரும்பும் மனத்தையே யுடைய யாமும் எம்மால் இயன்ற முயற்சிபைச் செய்வோம். இறைவன் திருவருள் இருப்பின், நன்னாள் ஒன்று நிர்ணயித்து, வட நாடு நோக்கிச் சென்று, போர் புரிந்து வென்று, பிற நாடுகளை நம் ஆட்சிக்குள் அடக்கி, விரைவிலே மீளலாம்