பக்கம்:சோழ மன்னர்-முதற் பாகம்.djvu/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78

________________

78 என்று கருதுகிறோம். எம் படைஞரும் அடிக்கடி எழும் பெரும் போர்களிலே தம் ஆற்றலை வெளியிட்டாலன் றிப் பெரும்புகழ் பெறுதற்கில்லையே பென்று எண்ணு கின்றனர். ஆகையால், நுமது ஆசீர் வசனத்தையும் ஆமோதிப்பையும் எதிர் பார்த்து இன்னும் சில தினங் களிலே வட நாடு நோக்கிச் சென்று, அயலரசரை அடிப் படுத்தக் கருதியுளோம். தனக்கு இருக்கும் நாட்டின் அளவையும் பொருளின் அளவையும் கொண்டு ஓர் அர சன் திருப்தியடைதலாகாது என்பது நீவிர் அறிந்ததே யன்றோ ? என்று கூறினன். அவைக்களத்தார் அனைவரும் அதற்கு இணங்கிய தைத் தெரிவிக்க, அங்கிருந்தார்களில் ஆண்டிலும் அறி விலும் மூத்தாராகிய பெரியார் ஒருவர் எழுந்து, பின் வருமாறு கூறினர்: " அரசரே, அவ்வாறே செய்க. அதுவே சோழ நாட்டுக் குடிகளாகிய எமக்கு விருப்பமாம். எம் அரசர் எம் நாடு ஒன்றையே ஆளும் அரசராய் இருப்பதைக் காட்டிலும் பாரத பூமி முழுவதையும் ஆளும் பேரரசராய் இருப்பதே எமக்குப் பெருஞ்சிறப்பாம். ஆகையால், நீர் எண்ணிய எண்ணத்தை இனிது நிறைவேற்ற எல்லாம் வல்ல இறைவன் திருவருள் பெறுக. போர் வேந்தரே, தமிழகத்தாரை யெல்லாம் ஒரு குடைக்கீழ் அடங்கு மாறு இவ்விளம்பருவத்திலே செய்த நுமது ஆண்மை யையும் ஆற்றலையும் வடநாட்டவர் அறியுங் காலம் விரை விலே வருவதாக. சோழ நாட்டின் அரசியற் பொறுப் பைத் தக்கார் ஒருவர். கையில் அளித்து, இங்கு நாடு காவற்கு வேண்டிய படைஞரை நிறுத்தி, இப்போரிலே