பக்கம்:சோழ மன்னர்-முதற் பாகம்.djvu/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

79

________________

79 வெற்றி பெற வுதவியாய் நின்ற பல வீரரொடும் சென்று, வட நாட்டிலே போர் புரிந்து, வாகை சூடி வருக. இவ் வளவும் நீர் செய்து வருவதில் எமக்குப் பூரணச் சம்மத மே. ஆனால், நான் இங்கு ஒன்று கூற விரும்புகின் றேன்: இங்குள்ளார் பலரும் என் எண்ணமே யுடை யார் என்பதை யான் அறிவேன். நம் மறவர் மிக்க பயிற்சியுடையரே யாயினும், அயல் நாடுகளிற் சென்று போர் புரிந்து வென்று மீளுவதற்குப் போதிய பயிற்சி யுடையரா வென்பதை ஆராய வேண்டும். நீவிர் நாடு காவல் ஏற்றுக்கொண்டு இந்தப் பத்து ஆண்டுகளில் மூன்று பெரும்போர்கள் நிகழ்ந்திருக்கின்றன. இவை யெல்லாம் நம் நாட்டகத்து நிகழ்ந்தவையே. இவற்றால் நமக்கு உண்டாகிய பொருட் செலவு அதிக மென்றே கூற வேண்டும். இப்பொழுது நாட்டை யகன்று அயல் நாடுகளிலே செய்யும் ஒரு பெரும்போரைத் தொடங்கு தற்கு வேண்டிய பொருளும் பிறவுதவிகளும் நம்மிடம் உள்ளனவா என்பதை யோசிக்க வேண்டும். மேலும், எம் அரசர் போரில் வல்லவர் என்ற புகழ் அயல் நாடு களிலே பரவா முன்னரே அவர் அங்குப் போர்க்குச் செல்வாராயின், அங்குளார் எங்ஙனம் வரவேற்பரோ! முக்கியமாக நான், ஒன்று கூற வேண்டுவதுண்டு : நம் அரசர் பெருமக்கள் முறையே மணம் புரிந்துகொள் ளும் பருவத்தை நீர் அடைந்திருந்தும், மணம் புரிந்து கொள்ளாதிருப்பது நாட்டு மக்கள் மனத்துக்கு ஒரு குறையாகவே தோன்றுகிறது. போரினால் வென்ற இத் தமிழக முழுமையும் சில ஆண்டுகள் அமைதியோடு நன்கு ஆண்டு அறம் நிலை நிறுத்திப் பகைத்தாரை