பக்கம்:சோழ மன்னர்-முதற் பாகம்.djvu/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

81

________________

VIII உறையூர் நகரத்து அரச மாளிகைகளுக்குப் பின் புறத்தே ஒரு பெரிய பூஞ்சோலை உண்டு. அச்சோலை யில் அரசரும் அரசர்க்கு நெருங்கிய சுற்றத்தாருமே உலவி வரும் உரிமை யுடையார். தகுந்த காவலுடைய அச்சோலையிலே ஒரு நாள் மாலைப் பொழுதில் திருமா வளவன் தான் அங்குக் கண்டு பேச எண்ணிய ஒரு வரை எதிர் பார்த்துச் சிறிது மனக் கவலையோடு உலவிக் கொண்டிருந்தான். சிறிய பூஞ்செடிகளும் பெரிய பூ மரங்களும் தடாகங்களிலுள்ள பூங்கொடிகளும் அழகு செய்யும் காட்சி அன்று அவன் மனத்தைக் கவரவில்லை. அவன் இப்படி இருக்கையில், அங்கு இரும்பிடர்த்தலை யார் வந்தார். பின்னர் அவ்விருவரும் அங்கு அரசாங்க சம்பந்தமான பல விஷயங்களைக் குறித்துச் சிறிது நேரம் பேசிய பிற்பாடு, வேறு விஷயங்களைப் பேசத் தொடங்கினர். வளவன்:- ஐய, அமைச்சர் தலைவரே, இவ்வாறு நாட்டு மக்கள் எனது ஊக்கத்தைக் குறைக்க முயன்றது நன்று என்று நீவிர் எண்ணுகின்றீரா? அமைச்சர்:- இறைவன் அருளால் எடுத்த முயற்சி நன்கு நிறைவேறுமென்ற உறுதியான நம்பிக்கை தோன் றினாலன்றி, ஒன்றைத் தொடங்கலாமா? வடநாட்டுக் குச் சென்று பிற மன்னரை அடக்க வேண்டா என்று